New Page 1
‘மாயோன் மேய காடுறை
உலகமும்’ என்புழிப்போன்று, ஈண்டு ‘உலகு’ என்றது, உலகின் உட்பகுதிகளைக் காட்டிற்று.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 1அடைகின்ற உங்களோடு, அடையப்படுகின்ற அந்தத் தேவர்களோடு
வாசி அற எல்லாரையும் உண்டாக்கினவன் நின்றருளுகையாலே அடையத்தக்கதான திருநகரியை அடையுங்கோள்,’
என்கிறார்.
நீர் நாடி வணங்கும்
தெய்வமும் - 2இயல்பாகவே அமைந்தது ஓர் உயர்வு இல்லாமையாலே அவைதாம் இறாயாநிற்கச்செய்தே.
வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும் நீங்கள் பொரி புறந்தடவி வருந்திச் சேமம் சார்த்தி
வைத்து அடைகின்ற தேவர்களையும். கள்ளரைத் தேடிப் பிடிக்குமாறு போலே தேடிப் பிடிக்க வேண்டி
இருப்பவர்களாதலின், ‘நாடி’ என்கிறார். ஆடு திருடின கள்ளர்களே அன்றோ இவர்கள்தாம்?
3அணங்குக்கு அருமருந்து என்று அங்கே ஆடு கட்டினவர்கள் ஆகையாலே, தேடிப் பிடிக்க வேண்டுமே?
4‘கள்ளர்
_____________________________________________________
1. ‘தெய்வமும் உம்மையும்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘அடைகின்ற’
என்று தொடங்கியும். ‘திருக்குருகூரதனைப் பரவிச் சென்மின்கள்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அடையத்தக்கதான’ என்று தொடங்கியும்
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘நீர் நாடி வணங்கும் தெய்வம்’
என்று சொற்களைக் கூட்டிப் பொருள்
அருளிச்செய்கிறார். ‘நீர் நாடி’ என்றதனாலே, அவற்றுக்கு
இல்லாதவற்றை
நாடி என்று தோன்றுமேயன்றோ! அதனைக் காட்டுகிறார், ‘இயல்பாகவே’
என்று தொடங்கி.
‘வசன ஆபாசங்கள்’ என்றது, ‘ஏக ஏவ ருத்ர: ந
த்விதியாய தஸ்தே’ என்பது போன்றவைகளை. ‘யுக்தி
ஆபாசங்கள்’ என்றது,
‘கிருஷ்ணனுக்கு வரங்கொடுத்தான்’ என்பது போன்றவைகளை. ஆபாசம் -
போலி.
போலி வசனங்கள், போலி உத்திகள். ‘பொரி புறந்தடவி’ என்றது,
புறஞ்சுவர் கோலஞ்செய்தலைக்
குறித்தபடி.
3. ‘ஆடு திருடியது எங்கே?’
என்ன. ‘அணங்குக்கு’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். ‘ஆடு கட்டினவர்கள்’ என்றது,
‘ஆட்டினைக்
கட்டுவித்துக்கொண்டவர்கள்’ என்றபடி. 394ஆம் பாசுரம் இங்கு நினைவு
கூர்தல் தகும்.
பெரியவர்களுக்குத் தெரியாமல், சிறியவர்களைக் கொண்டு
ஒன்று வாங்கினால் அவர்களைக் கள்ளர்
என்று கூறப்படும் வழக்கு
உண்டேயன்றோ?
4. ‘ஆஸ்ரயிக்கிறவர்கள்
தேடிப் பிடிக்கும்படி போகிறது என்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘கள்ளர் அச்சம்’
என்று தொடங்கி. ‘கள்ளர்க்கு
உண்டாகும் பயம் பெரிய காடும் இடம் போராது,’ என்றபடி.
|