முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
4

New Page 1

வேண்டும்’ என்று கேட்க, உபதேசிக்கிறார் அன்றே? பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ இவருடைய பரோபதேசம்? 1‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான இராவணனை - பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று - உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார் என்பது.

333

ஒருநா யகமாய் ஓட உலகுஉடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்2
திருநா ரணன்தாள் காலம்பெறச் சிந்தித் துய்ம்மினோ.

    பொழிப்புரை : ‘ஒற்றை வெண்கொற்றக்குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகத்தை எல்லாம்

_____________________________________________________

1. ஸ்ரீராமா. யுத். 16 : 21.

2. ‘அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
   மறுசிகை நீக்கிஉண் டாரும்-வறிஞராய்ச்
   சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று
   உண்டாக வைக்கற்பாற் றன்று.’

  என்பது நாலடியார்.

  ‘முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய
      பாலடிசில் மகளிர் ஏந்த
  நல்ல கருணையா னாள்வாயும்
      பொற்கலத்து நயந்துண் டார்கள்
  அல்ல லடைய அடகிடுமின்
      ஓட்டகத்தென் றயில்வார்க் கண்டும்
  செல்வம் நமரங்காள் நினையன்மின்;
      செய்தவமே நினைமின் கண்டீர்.’

  என்பது சிந்தாமணி, 2623.