1
1‘பரமபதத்திலும்
சமுசாரிகள் படுகிற துக்கத்தை நினைத்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடேயாயிற்று எழுந்தருளியிருப்பது,’
என்று பட்டர் அருளிச்செய்ய, ‘பண்டிதர்’ என்கிறவர், ‘ஆச்சானும்,
பிள்ளையாழ்வானும் 2இத்தைக் கேட்டுப் பரமபதத்திலே ஆனந்தத்தால் நிறைந்தவனாய்
இருக்கிற இருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை உசிதமோ என்கிறார்கள்,’
என்று வந்து விண்ணப்பஞ்செய்ய, 3‘‘மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில்
தானும் மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது, ‘குணப் பிரகரணத்திலேயோ, துக்கப் பிரகரணத்திலேயோ?’
என்று கேட்கமாட்டிற்றிலீரோ? 4இது குணமாகில், ‘குணம்’ என்று பேர் பெற்றவற்றில்
அங்கு இல்லாதது ஒன்று உண்டோ?’ என்று அருளிச்செய்தார். ‘எல்லாக் கல்யாண குணங்களையும் இயல்பாகவேயுடையவன்,’
_____________________________________________________
1. இயல்பாகவே துக்கம் இல்லாதவன், சமுசாரிகளுக்கு இரங்கித்
துக்கிக்கிறான்;
ஆகையாலே, ஆனந்தத்துக்குக் குற்றம் இல்லை என்று அருளிச்செய்தார்
மேல். இனி,
‘ஆனந்தத்துக்குக் குற்றமானாலும், அதுவும் குணமேயாகும்,’
என்று வேறு ஒரு சமாதானத்தைப் பரமாசாரியர்
வசனத்தைக்கொண்டு
சாதிக்கிறார், ‘பரமபதத்தில்’ என்று தொடங்கி.
2. ‘இத்தைக்கேட்டு’ என்றது,
‘பட்டர் அருளிச்செய்ததாகப் பண்டிதர் என்பவர்
சொல்லக் கேட்டு’ என்றபடி. பட்டர்,
‘பரமபதத்திலும்’ என்று தொடங்கும்
வாக்கியத்தை அருளிச்செய்ய, பண்டிதரும் கேட்டு வேறோர்
இடத்தில்
இருந்து அதனைச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அங்கே வந்து சேர்ந்த
ஆச்சானும்
பிள்ளையாழ்வானும் இதனைக் கேட்டு, ‘இது கூடுமோ?’ என்ன,
பண்டிதர் அவ்வினாவிற்கு விடை கூறத் திறன்
இல்லாமல், பட்டரிடம் வந்து,
‘இவர்கள் இப்படிச் சொன்னார்கள்,’ என்று விண்ணப்பம் செய்ய,
அதற்குப்
பட்டர் உத்தரம் அருளிச்செய்தபடியைத் தெரிவித்தவாறு.
3. ஸ்ரீராமா. அயோத்.
2 : 42.
4.
‘சமுசாரிகளுடைய துக்கத்தைக் கண்டு துக்கப்படுவது குணப் பிரகரணத்திலே
சொல்லப்பட்டிருக்கையாலே
குணமானாலும், அது அவதாரத்திலே
சொன்னதேயன்றோ?’ என்ன, ‘இது குணமாகில்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். அங்கு - பரமபதத்தில். ‘பரமபதநாதன்
குணபூர்ணன்’ என்னுமதுக்குப் பிரமாணம்
அருளிச்செய்கிறார், எல்லாக்
கல்யாண குணங்களையும்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ விஷ்ணு புரா.6.5:84.
|