முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
404

என

என்னக் கடவதன்றோ? 1தன் இச்சை ஒழியக் கர்மம் காரணமாக வருபவை இல்லை என்னுமத்தனை போக்கி, திருவருளின் காரியமாய் வருமவை இல்லை எனில், முதலிலே சேதனன் அன்றிக்கே ஒழியும். 2‘அந்தப் பரம்பொருள் உயிர்க்கூட்டம் எல்லாம் பிரகிருதியில் இலயப்பட்டிருக்கும் காலத்தில் தான் தனியாய் இருந்துகொண்டு துக்கத்தை அடைந்தான்,’ என்றது, நித்தியவிபூதியும் குணங்களும் உண்டாயிருக்கச்செய்தே அன்றோ?

    ஆதிப்பிரான் அவன் மேவி உறைகோயில் - 3பரமபதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே, அவ்விடத்தை விட்டு, நல்ல படுக்கையையும் போகத்துக்கு ஏகாந்தமானவற்றையும் காற்கடைக்கொண்டு, குழந்தையினுடைய தொட்டிற்காற்கடையிலே கிடக்கும் தாயைப் போலே, காப்பாற்றுவாரை விரும்புமவர்களான இம் மக்கள் இருக்கிற இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடம் ஆயிற்று. மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் - மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து காட்சிக்கு இனியதாய் இருக்கும் திருக்குருகூர். 4உங்களுக்குதான் நல்ல தேசம் தேட்டமே; ‘முத்தனாகிற

_____________________________________________________

1. ‘அங்ஙனமாயின், ‘விஸோகா: என்கிற சுருதியோடு மாறு ஆகாதோ?’ எனின்,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தன் இச்சை ஒழிய’ என்று தொடங்கி
  என்றது. ‘பரமசேதனன் ஆகையாலே இவ்வநுக்கிரஹ காரியம் சொரூபத்தோடு
  சேர்ந்தே இருக்கும்,’ என்பது கருத்து.

2. ‘உள் வெதுப்போடு இருப்பான்’ என்பதற்கு உபபத்தி காட்டினார்,
  பிரமாணமும் காட்டுகிறார், ‘அந்தப் பரம்பொருள்’ என்று தொடங்கி. இது,
  மஹோபநிடதம்.

3. ‘மேவியுறை கோயில்’ என்பதற்கு ‘போகஸ்தானமான பரமபதத்திலே
  எழுந்தருளியிருக்கச்செய்தேயும், சமுசாரிகள் படுகிற கிலேசத்தை
  அநுசந்திக்கையாலே உள்வெதுப்போடே இருப்பான் அங்கு,’ என்று ஒரு
  கருத்து அருளிச்செய்தார் இதுகாறும். இனி, ரக்ஷக அபேக்ஷை இன்றிக்கே
  தன்னோடு ஒத்த நித்திய முத்தர்களுக்கு
  முகங்கொடுத்துக்கொண்டிருக்கையாலே பொருத்தம் இல்லை அங்கு;
  இரட்சகத்தை விரும்புகின்றவர்களான சமுசாரிகளை இரட்சிக்கையாலே
  பொருந்தி வசிப்பது இங்கே என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்யத்
  திருவுள்ளம் பற்றிப் ‘பரமபதத்தில்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். 

4. ‘மாட மாளிகை சூழ்ந்து அழகாய’ என்ற விசேடணத்திற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘உங்களுக்கு’ என்று தொடங்கி.