முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
405

New Page 1

பேற்றினைக் கொடுக்கும் தேசம், என்று தோற்றுகிறதில்லையோ?’ என்றபடி. அதனைப் பாடி ஆடி - பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாடி, உடம்பு இருந்த இடத்தில் இராமல் ஆடி, கிரமமின்றியே கூப்பிட்டுக் கொண்டு. 1இதனால், ‘அதனுள் நின்ற ஆதிப்பிரான்’ என்ற இடம் மிகை என்கிறார். என்றது, 2‘பகவான் எழுந்தருளியிருக்கும் ஊரில் வசிக்கக்கடவன்,’  3‘இந்தத் தேசமானது, புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது; விரும்பியனவற்றை எல்லாம் கொடுக்கக் கூடியது. என்கிறபடியே, இதுதானே பேறு,’ என்றபடி. 4அந்தத் தேசம் என்றால் தம் திருவுள்ளம் இருக்குமாறு போலே இருக்கும் என்று இருக்கிறார்காணும் எல்லார்க்கும்.

    பல் உலகீர் - ஒருவன் சமித்தைக் கையிலே உடையவனாய் ஐம்பொறிகளையும் அடக்கியவனாய் வர, அவனுக்கு நலத்தை உபதேசம் செய்கிறார் அல்லர்; ‘இவை என்ன உலகியற்கை!’ என்று, உலகம் கிலேசப்படுகிறபடியைக் கண்டு எல்லார்க்கும் சொல்லுகிறாரே அன்றோ? ஆதலால், ‘உலகீர்’ எனப் பொதுவில் அழைக்கிறார். பரந்தே - 5‘பெரிய திருநாளுக்கு எல்லாத் திக்குகளினின்றும்

_____________________________________________________

1. ‘அதனை’ என்ற பதத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இதனால்’ என்கிறார்.

2. ‘சர்வேசுவரன் பிராப்பியன் ஆவான். அவன் இருந்த தேசமும் பிராப்பியம்
  ஆமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பகவான்’ என்று
  தொடங்கி. காருடபுராணம், பதினோராவது அத்தியாயம். இங்கே,

3. ‘விரும்பினவை எய்தும்; வினையனைத்தும் தீரும்;
  அரும்பரம வீடும் அடைவீர் ;- பெரும்பொறிகொள்
  கள்ளம்பூ தங்குடிகொன் காயமுடை யீரடிகள்
  புள்ளம்பூ தங்குடியிற் போம்.’

  என்ற திவ்விய கவியின் திருவாக்கு நினைவு கூர்தல் தகும்.

4. ‘சமுசாரிகள் பாடி ஆடுவார்களோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அந்தத் தேசம்’ என்று தொடங்கி.

  ‘வளந்தழைக்க உண்டால்என்? வாசம்மணந் தால்என்?
  தெளிந்தகலை கற்றால்என்? சீசீ! - குளிர்ந்தபொழில்
  தண்குருகூர் வாவிச் சடகோபன் ஊர்எங்கள்
  வண்குருகூர் என்னாத வாய்.’

  என்றார் திவ்விய கவி.

5. பெரிய திருநாள் - திருவரங்கத்தில் மார்கழி மாதத்தில் நடக்கும்
  திருவத்தியயன உற்சவம்.