வந
வந்து ஏறுமாறு போன்று,
பல திக்குகளினின்றும் பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள்.
(2)
434
பரந்ததெய்வமும் பல்உல
கும்படைத்து அன்றுஉட னேவிழுங்கிக்
கரந்துஉ மிழ்ந்து
கடந்துஇடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்க ளால்அம ரர்வணங்
கும்திருக் குருகூர் அதனுள்
பரன்திற மன்றிப்
பல்லுல கீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.
பொ-ரை :
பரந்திருக்கின்ற தெய்வங்களையும் அவர்களுக்கு உறைவிடமான பல வகைப்பட்ட உலகங்களையும் படைத்தும்,
பிரளயம் வந்த அக்காலத்தில் உடனே விழுங்கியும், பிரளயம் அறியாதவாறு மறைத்தும், பின்னர்
வெளி நாடு காண உமிழ்ந்தும், திருவிக்கிரமாவதாரத்தில் இரண்டு அடிகளால் அளந்தும், வராஹ அவதாரத்தில்
பிரளயத்தினின்று எடுத்தும் செய்து போன காரியங்களைப் பார்த்திருந்தும், ‘அவனே யான்; அவனுக்கேயுரியது
உலகம்’ என்பதனைக் தெளியமாட்டுகின்றிலீர்; தேவர்கள் தலைகளாலே வணங்குகின்ற திருக்குருகூர்
என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேசுவரனுக்குச் சரீரமாய் அல்லது ஸ்வதந்தரத்தோடு
கூடியிருக்கிற வேறு தெய்வம் இல்லை: இருக்குமேயாயின், பல வகைப்பட்ட உலகத்தில் உள்ளவர்களே!
என்னோடு வந்து பேசுங்கள்.
வி-கு :
‘பல் உலகீர்! கண்டும் தெளியகில்லீர்! திருக்குருகூரதனுள் பரன் திறம் அன்றி மற்றுத் தெய்வம்
இல்லை; பேசுமின்,’ எனக் கூட்டுக. ‘அன்றி இல்லை’ என்க. திறம் - பிரகாரம்; சரீரம்.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 1‘உலகத்தை விழுங்குதல் முதலிய தெய்வத்தன்மை வாய்ந்த செயல்களாலும்
இவனே பரன்; இதனை உடன்படாதார் என்னோடு வந்து கலந்து பேசிக்காணுங்கோள்,’ என்கிறார்.
பரந்த தெய்வமும்
- 2கொள் கொம்பு மூடப் படர்ந்து இறைவனோடு ஒக்க எடுத்துக் கழிக்க வேண்டும்படி,
கை விஞ்சின தேவசாதியும். பல் உலகும் -அவர்கள் பரப்புக்கெல்லாம்
____________________________________________________
1. இரண்டாம் அடி மூன்றாம்
அடியைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. மற்றைத்
தேவர்கள், தங்களைத் தாங்களே ஈசுவரர்களாக
அபிமானித்திருக்கும் அபிமானத்தினுடைய பரப்பின்
உரப்பை
அருளிச்செய்கிறார், ‘கொள்கொம்பு மூட’ என்று தொடங்கி.
|