முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
410

New Page 1

சொல்ல வல்லார் உண்டாகில், வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக்காணுங்கோள்,’ என்கிறார்.

(3)

435

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன்மோக் கத்துக் கண்டுகொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்துஅழ காய திருக்குரு கூர்அதனுள்
ஈசன் பால்ஓர் அவம்பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?

    பொ-ரை : ‘பேசப்படுகின்ற சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் மற்றைத் தேவர்கட்கும் தலைவன் அவனேயாவன்; இதனைக் கபாலம் விடுபட்ட சரிதையாலே கண்டுகொள்ளுங்கோள்; ஒளி பொருந்திய பெரிய மதில்கள் சூழ்ந்து அழகாய் இருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேசுவரன் விஷயத்தில் பயனில்லாத வார்த்தைகளை ஏற்றிப் பேசுதல் அநுமானத்தைப் பிரமாணமாக உடையவர்கட்கு என்ன பயனைத் தருவதாம்?’ என்கிறார்.

    வி-கு : கபாலம் - பிரமனது மண்டை ஓடு. மோக்ஷம் - விடுபடுதல். தேசம் - ஒளி. அவம் - பயன் இன்மை. ‘இலிங்கியர்க்கு என்னாவது?’ என்க. இலிங்கியர் - அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்; அவர் ஆவார், பாசுபத நையாயிக வைசேடிகர்.

    ஈடு : நாலாம் பாட்டு. 1வியோமாதீத நையாயிக வைசேடிகர்கள் முதலானவர்கள் வந்து கிட்டினவர்களாய், 2‘உலகம் உறுப்புகளோடு கூடியிருக்கையால் காரிய ரூபமாய்

_____________________________________________________

1. ‘நாயகன் அவனே,’ என்று சுருதிப் பிரசித்தியையும், ‘கபால நன்மோக்கத்துக்
  கண்டுகொண்மின்’ என்று அர்த்த சாமர்த்திய ரூபலிங்கத்தையும்
  அருளிச்செய்கிறார், ‘வியோமாதீத’ என்று தொடங்கி. ‘வியோமாதீதர்’ என்பது.
  பாசுபத மதத்தினராய சைவர்களைச் சொல்லுகிறது. வியோம சப்தவாச்சியனான
  சர்வேசுவரனைக்காட்டிலும் மேம்பட்டதொரு பொருள் உண்டு என்று
  சொல்லுகின்றவர்கள் ஆகையாலே, இவர்களே ‘வியோமாதீதர்’ என்கிறார்.
  வியோமம் - ஆகாசம்.

      இவர்கள் ‘ஈசன், ஈசானன்’ என்கிற பெயர்களாலே சிவபரத்துவத்தைச்
  சாதிப்பவர்கள். நையாயிக வைசேடிகர்கள் அநுமானத்தாலே சிவனுக்குக்
  காரணத்துவத்தைச் சாதிப்பார்கள். ஆக, வியோமாதீதர்க்குப் சமாக்யை
  பிரதாநம். நையாயிக வைசேடிகர்கள், தார்க்கிகரில் அவாந்த்ரபேதம்.

2. இலிங்கியரை ஆநுமாநிகர் என்றும், சமாக்யைப் பிரதாநர் என்றும் இரண்டு
  வகையாகப் பிரித்து, இவர்களில் சமாக்யைப் பிரதாநராகிறார், ‘ஆகாச சப்த
  வாச்சியனான விஷ்ணுவுக்குப் புறம்பே உருத்திர தத்துவம் உண்டு’ என்று
  சொல்லுகிற பாசுபதர் என்றும், ‘அநுமானப் பிரதாநராகிறார், நையாயிக
  வைசேடிகர்கள்’ என்றும் பிரதிஜ்ஞை செய்து, இவர்கள் இருவரும் அநுமான
  சமாக்யையாலே உருத்திர காரணத்துவத்தைச் சாதிக்கும் பிரகாரத்தைக்
  காட்டுகிறார், ‘உலகம்’ என்று தொடங்கி. ‘எது எது அவயவத்தோடு கூடியது?’
  அது அது காரியம்:  குடத்தைப் போல’ என்கிறபடியே, காரிய ரூபம் உலகம்
  என்பதற்கு ‘உறுப்புகளோடு கூடியிருக்கை’ நியாமகம். என்றது, ‘உலகம் மண்,
  மலைகள் முதலான அவயவத்தோடு கூடியதாய் இருக்கின்றதே அன்றோ?’
  என்றபடி.