ஸ்ரீம
ஸ்ரீமாந் - ‘தாம் தாம் செய்த
கர்மத்தின் பலத்தைத் தாம் தாம் அனுபவிக்கிறார்களாகில், நாம் என்?’ என்றிருக்கும் ஈசுவர
சுவாதந்தரியம் தலை தூக்காதபடி ‘குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்,’ என்பாரும் அருகே உண்டு என்கிறான்.
ஸூஸ்ரோணி - உன் வடிவழகாலே வந்த சௌபாக்கியம், நான் சர்வேசுவரன் பக்கலிலே சென்ற அளவிலே
உதவிற்றுக்காண். ஸ்வப்ந லப்தம் - அனுபவம் செல்லா நிற்கச் செய்தே விழித்துப்
பார்க்குங்காட்டில் இல்லையாய் இருந்தது; ஆகையாலே, ‘நன்மோக்கம்’ என்கிறது. 1‘உங்களுக்கு
இப்போது மறுமாற்றம் சொல்லலாம்படியாக இது ஒன்று உண்டாயிற்று’ என்கிறாராதல்; ஸ்வப்நலப்த
தநம் யதா - ‘கனவில் கிடைத்த தனம் போலே போன வழி தெரியாமலே போயிற்று,’ என்கிறாராதல்.
நீங்கள்
ஈசுவரர்களாகச் சந்தேகப்படுவதற்குரியவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டீர்களே! ஒருவன் தலை கெட்டு
நின்றான்; ஒருவன் ஓடு கொண்டு பிராயஸ்சித்தம் செய்ய வேண்டியவனாய் நின்றான். ஓட்டை ஓடத்தோடு
ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெருங்குறைவாளரையோ பற்றுவது!
‘பாவமுடையவனாய்ப் பிச்சை புக்குத் திரிந்தான்,’ என்று நீங்களே சொல்லி வைத்து, அவனுக்கே
பரத்துவத்தைச் சொல்லவோ?’ 2ஒருவனுடைய ஈசுவரத்துவம் அவன்
_____________________________________________________
1. ‘நல்’ என்ற அடைமொழிக்கு,
மேலும் விசேடவுரை அருளிச்செய்கிறார்.
‘உங்களுக்கு இப்போது’ என்று தொடங்கி.
2.
‘கண்டுகொண்மின்’ என்பதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘ஒருவனுடைய’ என்று தொடங்கி.
|