1ம
1மறைவாகச்
சொல்லுமது ஒழிய எல்லாரும் அறியச் சொல்லுதல் இல்லையாதலின், ‘பறைதல்’ என்கிறார்.
2மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து, ‘ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது;
என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன, ‘நீ சர்வேசுவரன் பக்கல் பண்ணின
அபராதத்தாலேகாண்,’ என்ன, ‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்று விருப்பு இல்லாத வார்த்தைகள்
சிலவற்றை அவன் பேச, ‘எனது தலையை அறுப்பதைக்காட்டிலும் பெரிது இந்த வார்த்தை’ என்கிறபடியே,
என் தலையை அறுத்து என் கையிலே தந்தாயாகில் ‘என் பேரன் செய்த உபகாரம்’ என்று இருப்பேன்
யான்; ‘என் முன்பே பகவானை நிந்தை செய்தாய், நீ இராஜ்யப் பிரஷ்டன் ஆவாய்’ என்று சபித்து
விட்டான்; 3இதனை இப்படியே பட்டர் அருளிச்செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ
விவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்துமாவுக்குக் குறைவு வருவது ஒன்றனைச் சபியாமல், ‘இராச்சியத்திலிருந்து
நழுவினவனாய் விழுவாயாக’ என்று சபிப்பான் என்?’ என்று கேட்க, ‘நாயைத் தண்டிக்கையாவது, மலத்தை
விலக்குகையே அன்றோ? சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே? ஆகையால், இவனுக்கு
அநிஷ்டம் செய்கையாவது இதுவே அன்றோ?’ என்று அருளிச்செய்தார்.
இலிங்கியர்க்கு
என் ஆவது - அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்றது, ‘அந்தத்
தேவிற்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று; அத்தேவினைப் பற்றியதற்கு ஒரு பலம்
_____________________________________________________
1. ‘அவற்றைத் தம் வாயால்
சொல்ல மாட்டாமையாலே, ‘அவம்’ என்கிறர்,’
என்னுமிவ்விடத்தில்,
‘அரசன் அன்னவை யுரைசெய மறையவன்
அஞ்சிச்
சிரத லங்கரஞ் சேர்ந்திடச் செவித்தொளை
சேர்ந்த
உரகம் அன்னசொல் யான்உனக்கு
உரைசெயி னுரவோய்!
நரக மெய்துவன் நாவும்வெந் துகுமென
நவின்றான்.’
என்ற கம்பராமாணச் செய்யுள்
நினைவிற்கு வருகின்றது (இரணியன் வ. 37.)
2. தம் வாயால் சொல்லப்
போகாமைக்குக் காரணம் அதில் உண்டான
அஸஹ்யதை என்று கூறத் திருவுள்ளம்
பற்றி அதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘மஹாபலி’ என்று தொடங்கி
3. இடைப்பிறவரலாக (பிராசங்கிகம்) அருளிச்செய்கிறார், ‘இதனை இப்படியே’
என்று தொடங்கி.
|