New Page 1
பெற்றிகோள் அன்று;
இதனால், உங்களுக்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று; என்றிய பட்டிகோள்’ என்கிறார் என்றபடி.
(4)
436
இலிங்கத் திட்ட
புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர்
களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல்
கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற
பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.
பொ-ரை :
‘இலிங்கபுராணத்தைப் பிரமாணமாகவுடைய நீங்களும் சமணர்களும் பௌத்தர்களும் மேலும் மேலிட்டு
வாது செய்கின்ற வைசேடிகர்களான நீங்களும் நீங்கள் வணங்குகின்ற தெய்வங்களும் ஆகி நிற்கின்றவன்,
செந்நெற்பயிர்கள் மிக ஓங்கி வளர்ந்து கவரியைப் போல வீசுகின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய
தேசத்தில் எல்லாக் குணங்களோடும் பொலிந்து நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற
பிரானே ஆவான்; ஆதலால், யான் கூறுகின்றவை சிறிதும் பொய்யில்லை; அவனையே துதிசெய்யுங்கோள்,’
என்கிறார் என்றவாறு.
வி-கு :
‘இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் மற்றும் வலிந்து வாது செய்வீர்களும் ஆகி
நின்றவன், நும் தெய்வமும் ஆகி நின்றான்; ‘அவன் யார்’ எனின், ‘பொலிந்து நின்ற பிரான்
கண்டீர்’ என்க. நின்றான் - வினையாலணையும் பெயர். ‘பொலிந்து நின்ற பிரான் ஆகி நின்றான்,’
என முடிக்கலுமாம்.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1இலிங்கபுராணம் தொடக்கமான குத்ருஷ்டி ஸ்மிருதிகளையும், வேதத்திற்குப்
புறம்பான ஸ்மிருதிகளையும் பிரமாணமாகக் கொண்டு வந்தவர்களை விலக்குகிறார்.
இலிங்கத்திட்ட
புராணத்தீரும் - இலிங்க விஷயமாக இடப்பட்ட புராணத்தையுடைய நீங்களும். 2சாத்துவிக
_____________________________________________________
1. மேல் திருப்பாசுரத்தில்
அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டு
வந்தவர்களைத் தள்ளினார். ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு
வந்தவர்களைத் தள்ளுகிறார் இத்திருப்பாசுரத்தில். முதல் இரண்டு
அடிகளையும் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘புறம்பான
ஸ்மிருதிகள்’ என்றது, ஜைந சார்வாக பௌத்தாதி ஸ்மிருதிகளை.
2. ‘இலிங்கத்து
இட்ட புராணத்தீர்’ என்று விசேடிக்கையாலே, இராஜஸ தாமச
புராணங்களினுடைய பக்ஷபாதித்துவமும்,
சாத்துவிகபுராணங்களினுடைய
அபக்ஷபாதித்துவமும் தோற்றுகிறது என்கிறார். ‘சாத்துவிக புராணங்களை’
என்று தொடங்கி. ‘வேற்றுமை இதுவாயிற்று’ என்றது, ‘இலிங்க விஷயமாகக்
கற்பித்துச் சொன்னது
ஆகையாலே, நிகர்ஷமே வேற்றுமை’ என்றபடி.
நிகர்ஷம் - தாழ்வு.
|