1சர
1சர்வேசுவரன்
தன் சர்வாத்தும பாவத்தைச் சொல்லுமாறு போன்று, சிவன், அதர்வ சிரஸ்ஸிலே நின்று, 2தன்படிகளைச்
சொல்லி, ‘அவன் தானே இங்ஙனம் சொல்லுகைக்கு அடி என்?’ என்று ஐயங்கொண்டு, 3‘ஸ:
அந்தராத் அந்தரம் பிராவிசத்’ என்கிறபடியே, ‘பரமாத்தும பிரவேசத்தாலே சொன்னேன்,’ என்றானே.
4‘என்னிடத்திலிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன; அநாதியான என்னிடத்தில்
எல்லாம் இலயம் அடைகின்றன. யானே எல்லாப் பொருள்களுமாய் இருக்கிறேன்; யானே அழிவில்லாதவனும்
முடிவில்லாதவனும் ஆகிறேன்; பரமாத்துமாவை ஆத்துமாவாகப் பெற்றுள்ளேன்,’ என்றான் பிரஹ்லாதாழ்வான்.
5பிரஹ்லாதாழ்வான் பக்கல் பரத்துவம்
_____________________________________________________
1. ‘சர்வேசுவரன், தன் சர்வாத்தும
பாவத்தைச் சொல்லுமாறு போன்று’ என்றது,
ஸ்ரீ கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் 20 முதல் 42
முடிய உள்ள
சுலோகங்களைத் திருவுள்ளம் பற்றி.
2. ‘தன் படிகளைச்
சொல்லி’ என்றது, ‘அஹம் ஏக: பிரதமம் ஆஸம் வர்த்தாமிச
பவிஷ்யாமிச நாந்ய: கச்சின் மத்தோ
வியதிரிக்த இதி’ (அதர்வசிகை) என்ற
வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.
3. ‘ஸ: அந்தராத் அந்தரம்
பிராவிசத்,’ இது, அதர்வசிகை.
‘ஸ :- அந்தச் சிவபிரான்,
அந்தராத் - தேக இந்திரியங்களைக் காட்டிலும்
உள்ளே இருக்கிற ஜீவாத்துமாவாகிற தன்னினின்றும்.
அந்தரம் -
பரமாத்துமாவை, பிராவிசத் - அடைந்தார். என்றது, ‘சிவபிரான் பரமாத்தும
பாவத்தை
அடைந்தார்’ என்பது கருத்து. ‘அன்றிக்கே, ஸ :- அந்தப்
பரமாத்துமா, அந்தராத் - தேக இந்திரியங்களைக்காட்டிலும்
உள்ளே
இருக்கின்ற ஜீவாத்துமாவின், அந்தரம் - உள்ளே, பிராவிசத் -
பிரவேசித்தார்,’ என்னலுமாம்.
என்றது ‘பரமாத்துமா சிவபிரான் உள்ளே
பிரவேசித்தார்; ஆதலால், பரமாத்தும பாவத்தைச் சிவன்
அடைந்தார்,’
என்பது கருத்து.
4. ‘பரமாத்தும பிரவேசத்தாலே
இப்படிச் சொன்ன பேர் உளரோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘என்னிடத்திலிருந்து’
என்று தொடங்கி.
‘மத்தஸ் ஸர்வம் அஹம் மபிசர்வம்
சநாதநே
அஹமேவ அவ்யய: அநந்த:
பரமாத்ம ஆத்ம ஸம்ஸ்ரய:’
என்பது, ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 19
: 95.
‘கடல் ஞாலம் உண்டேனும்
யானே என்னும்’
என்ற திருவாய்மொழி இங்கு
அநுசந்தேயம்.
5. ‘பிரஹ்லாதாழ்வானைத்
திருஷ்டாந்தமாகச் சொன்னதற்குக் கருத்து என்?’
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பிரஹ்லாதாழ்வான்
பக்கல்’ என்று
தொடங்கி.
|