New Page 1
மெய் ஒன்றும் இல்லை;
பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை. போற்றுமினே -
1நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது, எனக்கு உங்கள் பக்கல்
உண்டான ‘அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே, மிக்க அருளாலே அன்றோ? அவ்வருளின்
காரியம் பிறக்க வேண்டுமே. 2‘கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறியிராமல்,
சடக்கென அவன் திருவடிகளிலே அடைவதற்குப் பாருங்கோள்.
(5)
437
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மைஇன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடுபெற் றால்உலகு இல்லைஎன்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூர்அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம்கண் டீர்அது அறிந்தறிந்து ஓடுமினே.
பொ-ரை : வேறு ஒரு தெய்வத்தைத் துதித்து
ஆதரிக்கும்படியாகத் தனக்குப் புறம் ஆக்கி உங்களை இவ்வகையாகத் தெளியும்படியாகச் செய்து வைத்தது.
எல்லோரும் மோக்ஷத்தை அடைந்தால் சாஸ்திர மரியாதை கெட்டுவிடும் என்றே ஆம்; சேற்றிலே செந்நெற்பயிர்களும்
தாமரைகளும் உயர்ந்து வளர்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
மிக்க ஆற்றலோடு கூடிய எம்பெருமானது மாயமாகும் இது; அதனை அறிந்து அறிந்து தப்பிப் பிழைப்பதற்குப்
பாருங்கோள்.
வி-கு : ‘மற்றோர் தெய்வம் போற்றிப் பேண’
எனக் கூட்டுக. உலகு - சாஸ்திரம். ஆற்ற வல்லவன் - இறைவன். கண்டீர் - முன்னிலை அசைச்சொல்.
ஈடு : ஆறாம் பாட்டு. 3‘பகவானுடைய
பரத்துவத்தை நீர் அருளிச்செய்யக் கேட்ட போது வெளிச்சிறத்து
_____________________________________________________
1. ‘‘போற்றுமின்’
என்று நீர் சொல்லுமது ‘ஆப்தம்’ என்று நம்புவதற்குக்
காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நீங்கள்
விரும்பாதிருக்க’ என்று தொடங்கி.
2. ‘கிரமத்திலே’
என்று தொடங்கி அருளிச்செய்யும் பொருள், ‘போற்றுமினே’
என்ற ஏகாரத்திலே நோக்கு.
3. ‘எல்லீரும்
வீடு பெற்றால் உலகு இல்லை,’ என்றதிலே நோக்காக அவதாரிகை
அருளிச்செய்கிறார். வெளிச்சிறத்து - ஞானம் உண்டாகி.
|