ஒன
ஒன்று குறைந்திருப்பது இல்லையாயிற்று
என்பதனைத் தெரிவித்தபடி. ஆற்ற வல்லவன் - மிகவும் வல்லவன். என்றது, ‘சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே,
புண்ணியம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும், பாவம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும்
செய்ய வல்லவன்’ என்றபடி. மாயம் கண்டீர் - 1‘என்னுடைய மாயையானது ஒருவராலும் தாண்டக்கூடாதது,’
என்கிறபடியே, தான் அகற்ற நினைத்தாரைத் தன் பக்கல் வந்து கிட்டாதபடி பிரகிருதியை இட்டு வஞ்சித்து
வைத்தபடி கண்டீர்கோள்.
அது அறிந்து - ‘இது
அவனுடைய மாயம்,’ என்னுமதனை அறிந்து. அறிந்து ஓடுமின் - 2‘சத்திய சங்கல்பம் முதலான
குணங்களையுடைய என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ, அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகிறார்கள்,’
என்கிறபடியே, மாயையினைத் தாண்டுதற்கு உபாயமான பிரபத்தியையும் தானே அருளிச்செய்து வைத்தான்;
அதனை அறிந்து, அவ்வழியாலே அவனைப்பற்றி, இந்த மாயையினைத் தப்பப் பாருங்கோள். என்றது,
‘இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில், அவனோடு பிரிய நின்று வெல்லப்
பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,’ என்றபடி.
(6)
438
ஓடிஓடிப் பலபிறப்பும்
பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்துபல்படி
கால்வழி ஏறிக்கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற
திருக்குரு கூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு
அடிமை புகுவதுவே.
பொ - ரை :
‘வேறு ஒரு தெய்வத்தைப் பாடியும் ஆடியும் வணங்கியும் பலப்பல வகைகளாலே சாஸ்திரங்கள் கூறிய வழிகளிலே
சென்று திரிந்து திரிந்து, பல பிறப்பும் பிறந்து, அதன் பலன்களைக் கண்டீர்கள்; ஆன பின்பு, தேவர்கள்
ஒருங்கு கூடித் துதிக்கும்படியாகத் திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்திலே நின்ற திருக்கோலமாய்
எழுந்தருளியிருக்கின்ற ஆடு புட்கொடியையுடைய ஆதிமூர்த்திக்கு அடிமை புகுங்கோள்,’ என்கிறார்.
_______________________________________________
1.
‘தைவீஹ் யேஷா குணமயீ மம
மாயா துரத்யயா
மாமேவயே ப்ரபத்யந்தே மாயா மேதாம்
தரந்தி தே.’
இது, ஸ்ரீ கீதை, 7 : 14.
2. ஸ்ரீ கீதை, 7 : 14.
|