1பகவ
1பகவானிடத்தில்
அடைக்கலம் புகுந்து ஞானாதிகராய் இருப்பார் ஒருவர், இருந்து தம்முடைய வஸ்திரத்தைப்
புரையாநின்றாராய், அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகாநிற்க, இவர் அநாதரித்திருந்தாராய்,
தேவியானவள், ‘நீர் எல்லார்க்கும் பெரியராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக்
காலை நீட்டிக்கொண்டிருந்தானே!’ என்ன, தேவனும், ‘அவன் பகவத்பத்தன் போலேகாண்,’ என்ன, தேவியும்,
‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன, இருவரும் இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை
மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும் வரங்களும் வேண்டிக்கொள்ளக் கடவர்களாய்
இருப்பார்கள்; நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல், சில உபசாரங்களைச் செய்தல்,
சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே?’ என்ன, ‘அழகிது! அவையெல்லாம் செய்யக்கடவன்,
மோக்ஷம் தரலாமோ?’ என்ன ‘அது நம்மாலே செய்யலாமதன்று; பகவானிடத்தில் சரணாகதி
செய்து அவன் திருவருளாலே பெற வேண்டும்,’ என்ன, ‘ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’
என்ன, ‘அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது? நம்மால் செய்யப் போகாது,’
என்ன, ‘ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி திருவருள் புரிந்து நடக்குமித்தனை,’
என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற்கண்ணைக்காட்ட, இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக்
காட்டினார்,’ என்ற சரிதம் இங்கு நினைக்கத் தகும்.
கூடி வானவர் ஏத்த நின்ற
திருக்குருகூர் அதனுள் - 2உங்களால் அடையப்படுகின்ற தேவர்கள் இவ்வளவும் உங்களைக்
கும்பீடு கொண்டு, இத்தனை போது சென்று அங்கே வணங்காநிற்பர்கள்; அவர்கள் செய்கின்றவற்றைக்
கண்டாகிலும் நீங்களும் அவனை வணங்கப் பாருங்கோள்
_____________________________________________________
1. ‘ஞானாதிகராயிருப்பார்
ஒருவர்’ என்றது, திருமழிசைப் பிரானை.
இவ்வரலாற்றின் விரிவை, அவர் திவ்விய சரிதையில்
காணல் தகும். புரைதல்
- தைத்தல்.
2. ‘கூடி வானவர்
ஏத்த நின்ற’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘உங்களால்’ என்று தொடங்கி.
|