அ
அடிமை புகுவதுவே - அடிமை
புகுவதுவே செய்யத் தக்க காரியம். 1‘உங்களுக்குச் செய்ய வேண்டுவது ஒன்று இல்லை;
2அவன் உடைமையை அவனுக்காக இசைய அமையும்’ என்பார், ‘புகுவதுவே’ என ஏகாரம்
கொடுத்து ஓதுகிறார். ‘அவன் இதனை ‘என்னுடைமை’ என்றிருக்க, நீங்களும் ‘என்னுடைமை’
என்றிராமல், ‘அவனது’ என்று இசைய அமையும்,’ என்றபடி. 3‘‘அடிமை
புகுவது’ என்ற இடம், விதியாய், ‘கண்டீர்’ என்கிற இடம், அதுவும் செய்து பார்த்தீர்கோள் அன்றோ?
இனி, அவன் திருவடிகளில் அடிமை புகப் பாருங்கோள்,’ என்கிறார்.
4யயாதி
சரிதத்தைப் பட்டர் வாசித்துப்
போந்திருக்கச்செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும்,
‘வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாய் வெளிப்போந்த பிரபந்தங்களில் இது எந்தப்
பொருளை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க, ‘புன்சிறு தெய்வங்களை அடைந்து ஒரு பயனைப் பெற்றாலும்,
பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால், அதனை அவர்கள் பொறுக்கமாட்டார்கள்’ என்றும்,
‘சர்வேசுவரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்’ என்றும் சொல்லி, ‘ஆன
பின்பு, மற்றைத் தேவர்கள் வணங்கத் தக்கவர் அல்லர்; அவன் ஒருவனுமே வணங்கத் தக்கவன் என்னும்
பொருளைச் சொல்லுகிறது,’ என்று அருளிச்செய்தார்.
_____________________________________________________
1. ‘உங்களுக்குச் செய்ய வேண்டுவது
ஒன்று இல்லை,’ என்றது, பாடி ஆடிப்
பணிதல் முதலானவை வேண்டுவது இல்லை,’ என்றபடி.
2. ‘ஆதிமூர்த்தி’ என்றதனைத்
திருவுள்ளம் பற்றி, ‘அவன் உடைமையை’
என்கிறார்.
3. ‘‘அடிமை புகுவதுவே’ என்றதும்,
‘கண்டீர்’ என்றதும், சேரும்படி எங்ஙனே?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அடிமை
புகுவது’ என்று
தொடங்கி.
4. ‘மோக்ஷத்தைக்
கொடுக்கும் முதன்மை மற்றைத் தேவர்கட்கு இல்லையாயினும்,
சுவர்க்கம் முதலான புருஷார்த்தங்களைக்
கொடுக்கின்ற முதன்மை
அவர்களுக்கு உளதே?’ எனின், அவர்கள், தம்மையடைந்தவர்கள் பக்கல்
அழுக்காறு
கொள்ளுகின்றவர்கள் ஆகையாலே, அவ்வழியாலும்
அவர்களுக்கு உயர்வில்லை என்னுமதனை ஆப்த சம்வாதத்தாலே
காட்டுகிறார், ‘யயாதி’ என்று தொடங்கி. ‘இது’ என்றது, மஹாபாரதத்தில்
வந்துள்ள யயாதி சரிதத்தைக்
குறித்தபடி. இதனால், இதிகாச புராணங்களில்
வந்துள்ள ஒவ்வொரு சரிதையும் ஒவ்வொரு தத்துவத்தை
உட்கொண்டது
என்று தெளிதல் தகும்.
|