1
1‘முனி
புங்கவரே! இதற்கு முன் ஏவிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தவர்களாய் வந்து உம்மைச் சார்ந்திருக்கிறோம்,’
என்கிறபடியே, தாழ நிற்க வல்லான் இவனேயன்றோ?
2‘யாதவர்கள்
முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே,
‘கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்கநிதி பதுமநிதி தொடக்கமானவற்றைக் கொடுவந்து கொடுத்துச்
செய்யாதன இல்லை; பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியேயாய் இருந்தது; ‘நாம் பகவானை வணங்குகிற
வணக்கத்துக்கும் பலம் அங்ஙனே ஆகிறதோ?’ என்று அஞ்சியிருந்தோம்,’ என்ன, ‘அங்ஙன் ஆகாது;
அஞ்ச வேண்டா; அவர்கள் ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக் கொண்டு
விரும்புகையாலே அவர்களுக்குத் தேகம் எல்லையாய்விட்டது; நாம் சொரூப ஞானத்தாலே, என்றும் உள்ள
ஆத்துமாவுக்கு வகுத்த பேறு பெற வேண்டும் என்று பற்றுகையாலே பேறும் உயிர் உள்ள வரையிலும்
இருக்கும்,’ என்று அருளிச்செய்தார்.
(7)
439
புக்குஅடி மையினால்
தன்னைக் கண்ட
மார்க்கண்
டேயன் அவனை
நக்க பிரானும்
அன்றுஉய்யக் கொண்டது
நாரா யணன்
அருளே;
கொக்குஅ லர்தடம்
தாழை வேலித்
திருக்குருகூர்
அதனுள்
மிக்க ஆதிப்பி
ரான்நிற்க, மற்றைத்
தெய்வம்
விளம்புதிரே!
_____________________________________________________
1. ‘இறைவன், அடியார்கள்
வாழ்வே தனக்கும் வாழ்வாக நினைத்திருப்பானோ?’
என்ன, ‘அங்ஙனம் நினைத்திருப்பதல்லாமல்,
அவர்களை உயர்வாகவும்
தன்னைத் தாழ்வாகவும் நினைத்திருப்பான்,’ என்கிறார், ‘முனிபுங்கவரே?’
என்று தொடங்கி. இது, ஸ்ரீ ராமா. பால. 31 : 4.
2. ‘மற்றைத்
தேவர்களை அடைவதனால் ஒருவிதப் பயனும் இல்லை என்று
சொன்னீர்; பகவானை அடைந்தவர்கட்கும்
பலத்தில் தடை உண்டாயிற்றே?’
என்று சங்கித்து, அந்த ஐயத்தை நீக்குகிறார், ‘யாதவர்கள்’
என்று தொடங்கி.
|