த
தாழைகளை வேலியாக உடைத்தாயிருக்கின்ற
திருநகரியாயிற்று; இதனால், நிலத்தியல்பு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி. மிக்க ஆதிப்பிரான்
நிற்க -அறப்பெரிய உலகத்திற்கெல்லாம் காரணமாயுள்ளவன் நிற்க; ‘மிக்க’ என்றதனால்,
சொல்லும் போது கனக்கச் சொல்லி, கிட்டினவாறே குறைந்திராதொழிகையைத் தெரிவிக்கிறார்.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், நெடுநாள் தன்னை வணங்கும்படி செய்துகொண்டு பின்பு
காரிய காலத்தில் வந்தவாறே வேறே ஒருவன் வாசல் ஏறக் கொண்டுபோக வேண்டாதிருக்கையைத் தெரிவித்தபடி.
மற்றைத் தெய்வம் விளம்புதிரே - 1‘சரீரங்களிலே ஒன்றை ஈசுவரனாகச் சொல்லுகின்றீர்கோளே!’
என்றது, ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது ஒன்றற்கும் பொருளாகுந்தன்மை இன்றிக்கேயிருக்க, சரீரியாகச்
சொல்லிக் கேட்டினை அடைகின்றீர்கோளே கெடுவிகாள்!’ என்கிறார் என்றபடி. ‘விளம்புதிரே’
என்ற ஏகாரத்தால், ‘எடுத்துப் பேசுவதற்கும் தகுதி இல்லை’ என்று இருக்கிறார்காணும் இவர்.
(8)
440
விளம்பும் ஆறு
சமய மும்,அவை
ஆகியும்
மற்றும்தன்பால்
அளந்து காண்டற்கு
அரியன் ஆகிய
ஆதிப்பி
ரான்அமரும்
வளங்கொள் தண்பணை
சூழ்ந்து அழகுஆய
திருக்குரு
கூரதனை
உளங்கொள் ஞானத்து
வைம்மின் உம்மை
உயக்கொண்டு
போகுறிலே.
பொ-ரை :
சொல்லப்படுகின்ற ஆறு புறச் சமயங்களும், மற்றுமுள்ள குத்ருஷ்டிகளும் சபையாகத் திரண்டு வந்தாலும்,
தன் விஷயத்தில் அளவிட்டுக் காண்பதற்கு அரியனாய், இருக்கிற ஆதிப்பிரான் அவன் எழுந்தருளியிருக்கின்ற,
வளப்பம் பொருந்திய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்து அழகாய் இருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய
தேசத்தை, நீங்கள் உங்களை உய்வித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்தீர்களாகில், மனக்கண்ணிலே
வையுங்கோள்,’ என்கிறார்.
வி-கு :
‘ஆறு சமயமும் மற்றும் அவை ஆகியும்’ என்க. அவை -சபை. ‘அமரும் திருக்குருகூர்’ என்க. ‘உம்மை உய்யக்கொண்டு
போகுறில், அதனை உளம்கொள் ஞானத்து வைம்மின்,’ என்க.
_____________________________________________________
1. மேலே
கூறிய நாராயண பதத்தைத் திருவுள்ளம் பற்றிச் ‘சரீரங்களிலே
ஒன்றை’ என்று அருளிச்செய்கிறார்.
|