வஸ
வஸ்துவை ‘இது’ என்று அளவிட
வேண்டுமே? அதாவது, ‘இவனுடைய சொரூப ரூப குண விபூதிகள் புறம்பான குத்ருஷ்டிகளால் அசைக்கமுடியாதனவாய்
இருக்கும்,’ என்றபடி. 1‘அதற்கு அடி என்?’ என்றால், ‘ஆதிப்பிரான்’ என்கிறார்.
என்றது, 2‘என்னுடைய தாய் மலடி என்ன ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.
வளம் கொள் தண்
பணை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனை - செல்வத்தையுடைத்தாய்ச் சிரமத்தைப் போக்கக் கூடியதான
நீர் நிலங்களாலே சூழப்பட்டு, கண்டார்க்கு வைத்த கண் வாங்க ஒண்ணாதபடி காட்சிக்கு இனியதான
திருநகரியை. உளம்கொள் ஞானத்து வைம்மின் - 3ஞானம் உதித்து, புறத்தேயுள்ள இந்திரியங்களாலே
புறப்பொருள்களில் செல்வதற்கு முன்னே, மனக்கண்ணுக்குத் திருநகரியை விஷயம் ஆக்குங்கோள். உளம்
கொள் ஞானம் - மானச ஞானம். என்றது, 4‘புறத்திலே செல்லாதபடி ஞானத்தை உள் விஷயத்தில்
(திருநகரியில்) ஈடுபடும்படியாகச் செய்யப் பாருங்கோள்,’ என்றபடி. உம்மை உய்யக் கொண்டு
போகுறிலே - ‘இவனை இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே, உம்முடைய இருப்பைப் பெற்றுப்
போகவேண்டியிருக்கில். 5‘இல்லாதவனாக ஆகிறான்’ என்கிறபடியே, ‘சென்றற்றது’ என்றே
இருக்கிறார்
_____________________________________________________
1. ‘‘அதற்கு அடி என்?’ என்றால்.’
என்றது, ‘அளவிட முடியாமைக்கு அடி
என்?’ என்னுதல்; ‘இல்லை என்னக் கூடாமைக்கு அடி என்?’ என்னுதல்
என்றபடி.
2. ‘அவர் கூற்றுத் தாய்
மலடி என்றாற்போலும்’ என்பது நன்னூல் விருத். சூத்,
752.
3. ‘‘உளம் கொள் ஞானம்’
என்று மானச ஞானத்திலே வைக்கச் சொல்லுகிறது
என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ஞானம் உதித்து’ என்று
தொடங்கி.
4. ‘ஆதிப்பிரான் அமரும் திருக்குருகூர்’ என்பதற்கு, வேறு ஒரு பாவம்
அருளிச்செய்கிறார், ‘புறத்திலே’ என்று தொடங்கி.
‘‘உள் விஷயம்’ என்பது,
திருநகரியைக் காட்டுமாறு யாங்ஙனம்?’ எனின், ‘உள் பொருள்களாலே
பலமாக
விரும்பப்படுகின்ற காரணத்தால், திருநகரியும் உள் விஷயம்,’
எனப்படுகின்றது. உள்பொருள்கள் -
ஆழ்வாரும் எம்பெருமானும்.
5. ‘நித்தியமான
ஆத்துமாவை இப்போது ‘உய்யக்கொண்டு போகுறிலே’
என்பான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இல்லாதவனாக’
என்று தொடங்கி. தைத்திரீய ஆனந். 6.
|