முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
441

ஆய

ஆயிற்று இவர். 1‘மஹாத்மநா - தன்னில் தான் வாசி சொல்லுமத்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச் சொல்ல ஒண்ணாதபடியான பெருமாளோடே விரோதம் உண்டு; ஆகையாலே, இலங்கையும் இல்லை; இராவணனும் இல்லை; நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறினாற்போலே.

(9)

441

உறுவது ஆவதுஎத் தேவும்எவ் வுலகங்களும்
    மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்துஇத் தனையும்
    நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
    திருக்குரு கூரதனுள்
குறிய மாண்உரு வாகிய நீள்குடக்
    கூத்தனுக்கு ஆட்செய்வதே.

    பொ-ரை : எல்லாத் தேவர்களும் எல்லா உலகங்களும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களும் ஆகிய இத்தனையும், குற்றம் இல்லாத மூர்த்தியைப் போன்று இருந்தபடியே தன் பக்கலிலே நிற்க, வயல்களிலே நெற்பயிர்கள் கரும்புகளைப் போன்று ஓங்கி வளர்கின்ற திருக்குருகூர் என்ற திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கின்ற பிரஹ்மசாரி வேடத்தையுடைய வாமனனாகிய நீள்குடக்கூத்தனுக்கு அடிமை செய்வதே சீரியதாயும் தக்கதாயுமுள்ள புருஷார்த்தம் ஆகும்.

    வி-கு : ‘இத்திருப்பாசுரத்தை ஆட்செய்வதே உறுவது ஆவது,’ எனப் பூட்டுவிற்பொருள்கோளாக முடிக்க. ‘மற்றும் இத்தனையும் மறுவின்மூர்த்தியோடு ஒத்துத் தன்பால் நின்ற வண்ணம் நிற்க’ எனக்கூட்டுக. மாண் - பிரஹ்மசாரி. குடக்கூத்தன் - குடக்கூத்து ஆடியவன்; கிருஷ்ணன்.

_____________________________________________________

1. ‘அவர்கள் சத்தை உண்டு என்றிருக்க, இப்படி ‘இல்லை’ என்று சொன்ன பேர்
  உளரோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மஹாத்மநா’ என்று
  தொடங்கி. என்றது, தன்னைக் கட்டிக் கொண்டு போகின்ற இராக்கதர்களைப்
  பார்த்து, ‘பெருமாளோடு உங்களுக்கு விரோதம் வந்த காரணத்தாலே,
  இலங்கையும் இராவணனும் நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறியதைத்
  தெரிவித்தபடி. இது, ஸ்ரீராமா சுந். 43 : 25. ‘தன்னில் தான் வாசி
  சொல்லுமத்தனை போக்கி’ என்றது, ‘அவதார வேடத்தோடே நின்ற
  ஸ்ரீராமபிரானாகிய தனக்கு, பரத்துவ ஆகாரமே ஒப்பு என்று சொல்லுமத்தனை
  போக்கி, ஒப்பாகச் சொல்லத்தக்க வேறு பொருள் இல்லை,’ என்பதனைத்
  தெரிவித்தபடி.