மறு
மறு - குற்றம். 1‘இவை
சரீரத்தோடு ஒத்திருத்தலாவது என்?’ என்னில், பிரிந்து நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத
ஆதார ஆதேய பாவ - ஏவுகின்ற ஏவப்படுகின்ற பாவ - சேஷிசேஷ பாவமான சரீர இலக்கணங்கள் இவற்றிற்கு
உண்டு ஆகையாலே. 2மரத்திலே தேவதத்தன் நின்றால் அது அவனுக்குச் சரீரமாகாதே அன்றோ?
இங்கு அங்ஙன் அன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
இத்தனையும் நின்ற
வண்ணம் தன்பால் நிற்க - இவையடங்கலும் இருந்தபடியே தன் பக்கலிலே நிற்க. 3தன்னை
ஒழிந்த எல்லாப் பொருள்களும் தனக்குச் சரீரமாகையாலே அடிமையாம்படி இருக்கிற இந்த ஐசுவரியத்தில்
ஒன்றும் குறையாதபடி வந்து நிற்கை. என்றது, ‘இரு வகையான உலகங்களையும் உடையவனாகையாலே வந்த
ஐசுவரியம் அடையத் தோற்றும்படிக்கு ஈடாக ஆயிற்று இங்கு வந்து நிற்கிறது,’ என்றபடி. ‘நன்று; தாழ
நிற்கிற இடத்தில் ஐசுவரியம் தோற்றுமோ?’ எனின், இராஜபுத்திரன் ஓர் ஒலியலை உடுத்துத்
தாழ இருந்தாலும் இறைமைத்தன்மையில் குறைந்து தோன்றாதே அன்றோ?
செறுவில் செந்நெல்
கரும்போடு ஓங்கு திருக்குருகூர் அதனுள் - வயல்களில் செந்நெற்பயிர்களானவை கரும்போடு ஒக்க ஓங்காநின்றுள்ள
திருக்குருகூரதனுள்; 4பரமபதத்திலே எல்லாரும் ஒருபடிப்பட்டு இருக்குமாறு
_____________________________________________________
1. ஆக, ‘மறுவில் மூர்த்தி’
என்றதற்கு மூன்று வகையாகப் பொருள்
அருளிச்செய்தபடி. இம்மூன்று வகையான பொருள்களாலும் சரீரமாக
இருப்பதனாலே சேஷம் என்பதனைத் தெரிவித்தபடி.
2. ‘ஆதார ஆதேய பாவம்
சொன்னால் போதியதாகாதோ? ‘பிரிந்து
நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத’ என்ற விசேஷணம்
எற்றிற்கு?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மரத்திலே’ என்று தொடங்கி. ‘மரத்திலே
தேவதத்தன் நின்றான் என்றால், அங்குச் சரீர ஆத்தும பாவம் இல்லை; சாதி
குணங்கள் ஒரு வடிவிலே
கிடந்தன என்றால், அங்குச் சரீர ஆத்தும பாவம்
இல்லை; தாரகமாகவும் நியாமகமாகவும் சேஷியாகவும்
இருக்கிற ஒரு
பொருளிலே ஆத்தும பாவத்தையும், தார்யம் நியாம்யம் சேஷம் இவற்றோடு
கூடியிருக்கின்ற
ஒரு பொருளிலே சரீர பாவத்தையும் கோடல் வேண்டும்,’
என்றார் முன்னும் (7ஆம் திருப்பாசுரம்
உரை காண்க.)
3. ‘இத்தனையும் நின்ற வண்ணம்
நிற்க’ என்பதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘தன்னை ஒழிந்த’ என்று தொடங்கி.
4.
‘இவ்வுலகத்தில் ஒன்றில் ஒன்று குறையாதிருக்கக் கூடுமோ?’ என்ன,
‘குறைந்திராமைக்குக் காரணம்,
திவ்வியதேசமாகையாலே’ என்று கூறத்
திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘பரமபதத்திலே’ என்று
தொடங்கி.
|