New Page 1
போலே, அவ்வூரில்
பொருள்களில் ஒன்றில் ஒன்று குறைந்திருப்பதில்லை; குறிய - கோடியைக் காணியாக்கினாற்போலே,
கண்களால் முகக்கலாய் இருக்கும்படி வடிவை அமைத்தபடி. மாண் உருவாகிய - இட்டபோதொடு இடாத போதொடு
வாசியற முகமலர்ந்து போகும்படியாக இரப்பிலே தழும்பு ஏறினபடி. நீள் குடக் கூத்தனுக்கு - 1குடக்கூத்து
ஆடிவிட்ட பின்பும், மனத்தைக் கவர்கின்ற அச்செயலைப் பிற்பட்டகாலத்தில் கேட்டார்க்கும்
சம காலத்திலே கண்டாற்போலே பிரீதி பிறக்கும்படியாயிற்றுக் குடக்கூத்து ஆடிற்று. ஆள் செய்வதே
- 2அச்செயல் தானே அடிமையிலே மூட்டும்; நீங்கள் இசையுமத்தனையே வேண்டுவது.
(10)
442
ஆட்செய்து ஆழிப்
பிரானைச் சேர்ந்தவன், வண்குரு கூர்நகரான்,
நாட்க மழ்மகிழ்
மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன
பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த
மாநகர் மற்றது கையதுவே.
பொ-ரை :
‘வாசிகமான கைங்கரியத்தைச் செய்து, ஆழிப்பிரானைச் சேர்ந்தவரும், வளப்பம் பொருந்திய திருக்குருகூர்
நகரை உடையவரும், புதிய வாசனையோடு கூடின மகிழம்பூ மாலையைத் தரித்த மார்பையுடையவரும், ‘மாறன்,
சடகோபர்’ என்ற திருப்பெயர்களையுடையவருமான நம்மாழ்வார், விருப்பத்தோடு அருளிச்செய்த திருப்பாசுரங்கள்
ஆயிரத்துள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்களது கையிலே இருப்பதாம், இவ்வுலகத்திற்கு
வேறுபட்டதும் சென்றவர்கள் மீண்டு வருதல் இல்லாததுமான வைகுந்தமாநகரமானது,’ என்றவாறு.
வி-கு :
‘மற்றதுவாகிய வைகுந்த மா நகர், மீட்சியில்லாததான வைகுந்த மா நகர், இப்பத்தும் வல்லார் கையது,’
என்க. இனி, வைகுந்த மா நகர் அது மீட்சி இன்றிக் கையது என்று கூட்டலுமாம். கையது - குறிப்பு
வினைமுற்று. ‘ஆழிப்பிரானை ஆட்செய்து சேர்ந்தவன்’
_____________________________________________________
1. ‘நீள்’ என்ற அடைமொழிக்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘குடக்கூத்து’
என்று தொடங்கி. நீட்சி - இனிமையிலே நோக்கு.
2. ‘நீள்குடக்
கூத்தனுக்கு ஆட்செய்வது’ என்று கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார், ‘அச்செயல்தானே’ என்று தொடங்கி.
|