என
என்க. மகிழம்பூமாலை ஆழ்வார்க்குரியது;
‘வகுளாபரணன்’ என்ற திருப்பெயரையும் நினைவு கூர்க.
ஈடு :
முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பரமபதம் எளிது,’ என்கிறார்.
ஆள் செய்து ஆழிப்பிரானைச்
சேர்ந்தவன் - அடிமை செய்து சர்வேசுவரனைக் கிட்டினவர். 2முறையிலே சர்வேசுவரனைப்
பற்றினவர் ஆயிற்று இவர். 3என்றது, ‘வியக்கத்தக்க உடலின் சேர்க்கை ஈசுவரனுக்கு
அடிமை செய்யும்பொருட்டு’ என்கிறபடியே, அவன் கொடுத்த உறுப்புகளைக்கொண்டு உலக விஷயங்களிலே
போகாமல், 4‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே, வகுத்த விஷயத்துக்கே உரியதாக்கிக்கொண்டு
கிட்டினமையைத் தெரிவித்தபடி. 5ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு
போலேகாணும், தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது. 6கையில்
திருவாழி சேர்ந்தாற்போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி. கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே
இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
7ஆட்செய்கையாவது,
அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், சரீரத்தால் செய்தல் என
_____________________________________________________
1. ‘வல்லார் கையதுவே வைகுந்த மாநகர்’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘ஆழிப்பிரானைச் சேர்ந்து
ஆட்செய்தவன்’ என்னாது, ‘ஆட்செய்து
ஆழிப்பிரானைச் சேர்ந்தவன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘முறையிலே’ என்று தொடங்கி.
3. ‘அடிமை எல்லா ஆத்துமாக்களுக்கும்
பொதுவாகில், அநுகூலமான முறையில்
அவனைக் கிட்டுதல் எல்லார்க்கும் ஒவ்வாதோ? இவரை விசேடித்துக்
கூறுவது
என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘என்றது’ என்று தொடங்கி.
‘வியக்கத்
தக்க’ என்று தொடங்கும் பொருளையுடைய சுலோகம், விஷ்ணு
தத்துவம்.
4. திருவாய். 2.
3 : 4.
5. ‘ஆழிப்பிரானை ஆட்செய்து’
என்று கூட்டி பாவம் அருளிச்செய்கிறார்,
‘ஆட்கொள்ளுகைக்கு’ என்று தொடங்கி. ‘ஆழி’ என்றதிலே
நோக்கு.
6. ‘ஆழிப்பிரானைச் சேர்ந்தவன்’
என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்,
‘கையில்’ என்று தொடங்கி.
7. ‘ஆட்செய்கையாவது
யாது?’ என்ன, ‘இன்னது’ என்கிறார்,
‘ஆட்செய்கையாவது’ என்று தொடங்கி.
|