முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
47

என

என்று அறியாமல் ஏதேனுமாக முன்பு தோன்றியதை வாயிலே எடுத்து இடும்படி ஆயிற்றுப் பருவம். 1‘காப்பாற்றுகின்ற சர்வேசுவரனுடைய தொழில் ஆகையாலே, இது பாதுகாவலாய் முடிந்தது இத்தனை. அவன் பொறுக்கும் செயலைச் செய்தானாகில், இவளும் பொறுக்கும்படியானவற்றை ஆசைப்படாளோ?’ என்பது தாயாருடைய உட்கோள். ஆபத்து உண்டானால் 2வரைந்து நோக்குமது இல்லை ஆதலின், ‘உலகு’ என்கிறாள்.

    பரிவு இன்றி - ஒரு வருத்தம் இன்றிக்கே. என்றது, உலகங்களை எடுத்து வயிற்றிலே வைக்கிற இடத்தில் அதனால் ஒரு வருத்தம் இன்மையைத் தெரிவித்தபடி. ஆல் இலை - அப்பொழுது தோன்றியது ஓர் ஆல் இலையிலே. என்றது, 3‘அவ்வடம் பண்ணிக்கொடுத்த சுத்த பத்திரத்திலே’ என்றபடி, அன்ன வசம்செயும் - தன் வசமாக அன்றிக்கே 4‘அஹம் அன்னம் - நான் இனியபொருளாய் இருப்பவன்’ என்கிற அன்னத்திற்கு வசமாக. என்றது, உண்ட உணவு சரியாதபடி 5அதற்குத் தகுதியாகச் செய்தமையைத் தெரிவித்தபடி. அண்ணலார் - எல்லாப் பொருள்களையும் காக்கின்றவருமாய் எல்லாப்பொருள்களுக்கும் ஸ்வாமியும் ஆனவர். எல்லாப் பொருள்களையும் காக்கின்றவரான உமக்கு உம்மை ஆசைப்பட்ட வலிமை அற்றவளான என் விருப்பத்தைச் செய்யத் தட்டு என்?’ என்கிறாள்

_____________________________________________________

1. ‘இப்பருவத்தில் செய்யுந்தொழில் ரக்ஷணமாகக் கூடுமோ?’ என்னும்
  வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘காப்பாற்றுகின்ற’ என்று தொடங்கி.

2. வரைந்து - தாரதம்மியம் பார்த்து.

3. ‘அவ்வடம் பண்ணிக்கொடுத்த’ என்றது, ‘வேறு படுக்கை படுப்பார் இல்லை,’
  என்றபடி. அவ்வடம் - அந்த ஆலமரம். சுத்த பத்திரம் - வெற்று இலை.

4. தைத்திரீய உபநிட. பிருகு. ‘அஹமந்நம்’ என்கிற அன்னத்துக்கு என்றபடி.
  உணவு - ஆத்துமாக்கள்.

5. ‘அதற்குத் தகுதியாக’ என்றது, ‘வலக்கை கீழாக’ என்றபடி.

  ‘தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்தபழஞ்
  சேமப் புவனம் செரிக்கும்என் றேசிவன் மாமுடிக்கு
  நாமப் புனல்தந்த பொற்றாள் அரங்கர் நலஞ்சிறந்த
  வாமத் திருக்கர மேலாக வேகண் வளர்வதுவே.’

  என்பது திருவரங்கத்து மாலை.