என
என்பாள்.
‘அண்ணலார்’
என்கிறாள்.
1அவன்
இளமைப்பருவத்தில் பாதுகாப்பதில் குறிக்கோளாய்
இருப்பது போலே ஆயிற்று இவள் மயங்கி இருக்கும்
காலத்திலும் முறையில் கலக்கம் அற்று இருந்தபடி.
அண்ணலார் தாள்இணை
- அடிமையாக உள்ளவன் பற்றுவது ஸ்வாமியினுடைய திருவடிகளை அன்றோ? தாள் இணைமேல் அணி தண் அம்
துழாய் - இப்படி இவள் ஆசைப்படுகைக்கு 2அடியிலே பச்சையிட்டாள்காணும்.
பிராஹ்மணன் பிச்சு ஏறினாலும் ஓத்துச் சொல்லுமாறு
போன்று, இவளும் அடியில் கற்றுப் பழகியதனையே
சொல்லாநின்றாள்; 3தாள் பட்ட தண் துழாய்த் தாமத்திலே அன்றோ வாசனை பண்ணிற்று?
துழாய் என்றே - எப்போதும் அத்தையே சொல்லாநின்றாள். ‘கெடுவாய், இது, சேராதது காண்; இறந்த
காலத்தில் உள்ளது ஒன்றுகாண்,’ என்றால், அது செவியிற்படுகிறது இல்லை என்பாள்,
‘என்றே’
எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறாள். ஒரு காரணத்தாலே சாதித்துக்கொள்ள முடியாமல்
இருக்கையைத் தெரிவித்தபடி. மாலும் - மயங்கும். என்றது, ‘இது ஒரு சொல் அளவேயாய் அகவாயில்
இன்றிக்கே இருக்கை அன்றிக்கே, உள் அழியாநின்றாள்,’ என்றபடி. 4மாணிக்கத்தின்
ஒளியிலே நெருப்பு என்னும் புத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேண்டுமோ? வல்வினையேன் -
5மயக்கம் உற்றவளாய்க் கிடக்கிற
_____________________________________________________
1. ‘கலங்கியிருக்கும் நிலையிலே
‘அண்ணலார்’ என்னக் கூடுமோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவன் இளமைப்பருவத்தில்’
என்று
தொடங்கி.
2. அடியிலே பச்சையிட்டாள்,
சிலேடை : அடியிலே - முதலிலே,
திருவடிகளிலே. பச்சை - உபகாரம், திருத்துழாய்.
3. ‘அடியிலே கற்றது எங்கே?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘தாட்பட்ட’ என்று தொடங்கி. இது திருவாய்.
2. 1 : 2.
4. கிடையாததொன்றை ஆசைப்பட்டுக்
கிடையாவிட்டால் மோஹிப்பதற்கு
அசம்பாவித திருஷ்டாந்தம் அருளிச்செய்கிறார், ‘மாணிக்கத்தின்
ஒளியிலே’
என்று தொடங்கி. ‘கிடையாததிலே கிடைக்கும் என்று புத்தி பிறந்தால்
மோகம் வரவேண்டுமோ?’
என்பது கருத்து.
5. தாய் தன்னை ‘வல்வினையேன்’
என்று கூறுகின்ற மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘மயக்கம் உற்றவளாய்’ என்று தொடங்கி.
|