இவளுக
இவளுக்கு ஒரு துக்கத்தின்
நினைவு இல்லை ஆதலின், உணர்ந்திருந்து பார்த்துக் கூறுகிற தன்னை
‘வல்வினையேன்’
என்கிறாள். மடம் வல்லி - ஒரு
கொள்கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாதலின்,
‘வல்லி’
என்கிறாள்.
1‘தமப்பபனாரான
ஜனகமஹாராஜர் நாயகனை அடைவதற்குத் தக்க என்னுடைய வயதினைப் பார்த்து வியசனமாகிற கடலில் மூழ்கினார்,’
என்கிறபடியே இருக்கையைத் தெரிவித்தவாறு. மடம் - பற்றிற்று விடாமை.
(1)
345
வல்லிசேர் நுண்ணிடை
ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து
குரவை பிணைந்தவர்
நல்லடி மேல்அணி
நாறு துழாய்என்றே
சொல்லுமால் சூழ்வினை
யாட்டியேன் பாவையே.
பொ-ரை :
செய்த தீவினையையுடையேனாகிய என்னுடைய பாவை போன்ற பெண்ணானவள், ‘கொடிபோன்ற நுண்ணிய
இடையையுடைய ஆயர் பெண்களோடும் வரம்பு அழிந்த செயல்களைச் செய்து குரவைக்கூத்தைக் கோத்து
ஆடிய கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே அணிந்த வாசனை வீசுகின்ற திருத்துழாய்,’ என்றே
சொல்லாநின்றாள்.
வி-கு :
‘பாவை சொல்லும்’
என மாறுக. பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நல்லடி’ என்கிறாள். ‘வாலறிவன்
நற்றாள்’
என்றார் திருவள்ளுவனாரும்.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 2‘எல்லாப்
பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான சர்வேசுவரன் பிரளய ஆபத்திலே உடைமையாகிற தன் உலகத்தைக்
காப்பாற்றினானாகில், அதுவும் பேற்றுக்கு உடலாமோ?’ என்ன, ‘அது உடல் அன்றாகில் தவிருகிறேன்;
என் பருவத்தினையுடைய பெண்களுக்கு உதவின இடத்திலே எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள்
என்கிறாள்.
_____________________________________________________
1. ஸ்ரீராமா. அயோத்.
119 : 36.
2. ‘ஆய்ச்சியர்தம்மொடு
கொல்லைமை செய்து’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார். பேற்றுக்கு - அனுபவத்துக்கு.
உடல் -
காரணம். மேற்பாசுரத்தில் ‘மடவல்லி’ என்று தன்னைச் சொல்லி,
இப்பாசுரத்தில்
‘வல்லிசேர் ஆய்ச்சியர்’ என்று கூறுவதனால்’ என்
பருவத்தினையுடைய பெண்கள்’ என்கிறார்.
|