ஒ
ஒருசேர ஆண்ட சக்கரவர்த்திகள்,
கரிய நாயால் கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உடைந்த பானையை உடையவர்களாய்ப் பெரிய நாட்டிலேயுள்ள
மக்கள் எல்லாரும் காணும்படியாக இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வார்கள்;
ஆதலால், திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில்
என்றபடி) மனத்தால் நினைத்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.
விசேடக்குறிப்பு :
நாயகம் - முதன்மை. ‘ஆக ஓட ஆண்டவர்’ என்க. ‘ஆண்டவர் கொள்வர்’ எனக் கூட்டுக. ‘காலர்,
பானையர்’ என்பன, முற்றெச்சங்கள். ‘கவர்ந்த’ என்பது ஈண்டுச் செயப்பாட்டு வினையின்கண் வந்தது.
இத்திருவாய்மொழி,
கலிநிலைத்துறை.
ஈடு :
முதற்பாட்டில், 1‘சார்வபௌமராய்ப் போந்தஇராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து
இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்; ஆன பின்பு, 2‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ
- ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே, அழியாத செல்வமான
‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.
ஒரு நாயகமாய் -
தனி அரசாக. 3‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய ஐஸ்வரியத்தைப்
4பௌண்ட்ரகவாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி.
நிலை
_____________________________________________________
1. சார்வபௌமராய்ப்
போந்த இராஜாக்கள் - ஒரு நாயகமாய் உலகு உடன்
ஆண்ட சக்கரவர்த்திகள்.
2. ஸ்ரீ ராமாயணம் யுத்தகாண்டம்.
இது, மண்டோதரி வார்த்தை.
3.
தைத்திரீய
நாராயண. உப. 11 : 8.
4. பௌண்ட்ரக
வாசுதேவன்:
‘செங்கதிர்க் கற்றை
காலும் திகிரியஞ் செல்வன் யானே!
சங்கொடு தழல்வாய் நேமி
தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
அங்கவை விடுக லானேல்
ஆடமர்க் கெழுக’ என்னா
வெங்கடக் களிறட் டார்க்கு
விடுத்தனன் தூது மன்னோ.’
என்பது பாகவதம். இவன்
சரிதையைப் பாகவதம் பத்தாங்கந்தம் 88-ஆம்
அத்தியாயத்தால் உணரலாகும்.
|