என
என்று அறியுங்காணும் இவள்
வாசனையாலே; 1‘கலம்பகன் நாறுமே அன்றோ?’ என்றே சொல்லுமால் - 2நினைத்தது
வாய்விடமாட்டாத பெண்மை எல்லாம் எங்கே போயிற்று? சூழ்வினையாட்டியேன் - தப்பாதபடி அகப்படுத்திக்
கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். 3‘பிராட்டி துக்கத்தால் அழுதுகொண்டு என்னைப்
பார்த்து வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை,’ என்பது போன்று இருக்குமவள் வார்த்தை
சொல்லுகிறது என் பாபமே அன்றோ என்பாள், தன்னைச் ‘சூழ்வினையாட்டியேன்’
என்கிறாள். பாவையே - 4‘எல்லா நிலைகளிலும் தன் அகவாயில் ஓடுகிறது பிறர் அறியாதபடி
இருக்கக்கூடிய இயல்பாகவே அமைந்த பெண்மையையுடைய இவள் தன் பேற்றுக்குத் தான் வார்த்தை
சொல்லும்படி ஆவதே!
(2)
346
பாவியல் வேதநன்
மாலை பலகொண்டு,
தேவர்கள்
மாமுனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல்அணி
செம்பொன் துழாய்என்றே
கூவுமால்
கோள்வினை யாட்டியேன் கோதையே.
பொ-ரை :
‘வலிய தீய வினைகளைச் செய்த என்னுடைய பெண்ணானவள்,
‘பாக்களோடு கூடின வேதங்களில் சிறந்த மாலைகளைக் கொண்டு தேவர்களும் பெருமை பொருந்திய முனிவர்களும்
துதிக்கும்படி உலகத்தை அளந்து நின்ற சிவந்த திருவடிகளின்மேலே அணிந்த சிவந்த பொன் போன்று
விரும்பத்தக்க திருத்துழாய்’ என்றே கூப்பிடாநின்றாள்.’
_____________________________________________________
1. ‘அறியும் பிரகாரம்
யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்,
‘கலம்பகன்’ என்று தொடங்கி. கலம்பகன் -
கலப்பு வாசனை.
2. ‘சொல்லும்’ என்றதற்கு
பாவம், ‘நினைத்தது வாய்விட மாட்டாத’ என்று
தொடங்கும் வாக்கியம்.
3. ஸ்ரீராமா. அயோத்.
58 : 85. இது, பெருமாளையும் இளைய
பெருமாளையும் பிராட்டியையும் கங்கையின் கரையிலே விட்டு மீண்டு
அயோத்தியா நகரத்திற்கு வந்த சுமந்திரன் கூறுவது.
4. ‘பாவையே’
என்ற ஏகாரத்திற்குப் பொருள், ‘எல்லா நிலைகளிலும்’ என்று
தொடங்கும் வாக்கியம்.
|