வ
வி-கு :
‘தேவர்கள் முனிவர்கள் நன்மாலை பல கொண்டு
இறைஞ்ச நின்ற சேவடி’ என்க, ‘கோதை கூவும்,’ என மாறுக.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 1‘ஓர் ஊருக்காக உதவினதே அன்றிக்கே, ஒரு நாட்டுக்காக உதவினவன்
பக்கல் உள்ளது பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.
பா இயல் வேதம் -
பாவாலே இயற்றப்பட்ட வேதம், பா - செய்யுள். 2‘அநுஷ்டுப்’ என்றும், ‘பிருஹதீ’
என்றும், ‘திருஷ்டுப்’ என்றும் இவை முதலாகச் சொல்லப்படுகின்ற சந்தஸ்ஸூக்களையுடைத்தான வேதம்
ஆதலின், ‘பா இயல் வேதம்’
என்கிறார். நல் மாலை பல கொண்டு - அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு; என்றது,
ஸ்ரீ புருஷசூக்தம்
முதலியவைகளை. 3‘யாதொரு அடையத் தக்க பரம்பொருளின் சொரூபத்தை எல்லா வேதங்களும்
சொல்லுகின்றனவோ’ என்றும், 4‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் யானே’
என்றும் சொல்லப்படுகின்றவாறே மற்றைய இடங்களிலும் சொல்லப்படுகின்றவன் அவனேயாகிலும், சொரூப
ரூப குணங்களுக்கு நேரே வாசகங்களாக இருக்கையாலே, அவற்றை
_____________________________________________________
1. சென்ற பாசுரங்களும் மேல்
வரும் பாசுரங்களும் அவதாரத்தைக்
கூறுகின்றனவாதலின், இதுவும் அவதாரத்தைக் கூறுகிறதாகத் திருவுள்ளம்
பற்றி, அதற்குத் தக அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘ஓர் ஊர்’ என்றது,
திருவாய்ப்பாடியை.
‘ஒரு நாடு’ என்றது, பூமி முதலாயினவற்றை.
உதவினவன் - வாமனன்.
2. ‘அளவியற்சந்தம்’ என்றும்,
‘அளவழிச் சந்தம்’ என்றும் சந்தம் இரு
வகைப்படும். நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும்
உயர்ந்த
இருபத்து மூன்றடியானும் வந்து, தம்முள் ஒத்தும், குருவும் லகுவும் ஒத்தும்
வந்தன அளவியற்சந்தம்
எனப்படும். எழுத்தொவ்வாதும் எழுத்தலகு
ஒவ்வாதும் வருவன அளவழிச் சந்தம் எனப்படும். எட்டெழுத்தடி
அளவியற்சந்தம் ‘திருஷ்டுப்’ என்றும், ஒன்பதெழுத்தடி அளவியற்சந்தம்
‘பிருஹதீ’ என்றும் பெயர்
பெறும். ‘சந்தம், பா’ என்பன, ஒரு
பொருட்கிளவிகள்.
3. ‘எல்லா வேதங்களாலும்
சொல்லப்படுகின்றவன் சர்வேசுவரனாயிருக்க,
புருஷ சூக்தம் முதலானவைகளை மட்டும் ‘நன்மாலைகள்’
என்பது என்?’
என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘யாதொரு’
என்று தொடங்கி. இது, கடவல்லி உபநிடதம், 1. 2 : 15.
4.
ஸ்ரீகீதை, 15
: 15.
|