|
New Page 1
‘தோளிற்சார்த்தின
மாலை கொடுக்கிலும் கொள்ளாள்’ என்பாள், ‘சே அடி துழாய் என்றே கூவுமால்’ என்கிறாள். ஆல் -
இது ஒரு ஆச்சரியம் இருந்தபடி என்னே! அன்றிக்கே, அசையுமாம். கோள்வினையாட்டியேன் - முடித்து
அல்லாது விடாத பாவத்தைச் செய்த என்னுடைய. அன்றிக்கே, கோள் என்று மிடுக்காய், ‘அனுபவித்தே
தீர்க்க வேண்டும்படியான பாவம்’ என்னுதல். 1கோதையே - தன்மாலையையும் மயிர்
முடியையும் கண்டார் படுமதனைத் தான் படுவதே! இம்மாலையையுடைய இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே!
மார்வத்து மாலையான இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலைக்கு மால் அவன்; அம்மாலுக்கு
மால் இவள்.
(3)
347
கோதுஇல் வண்புகழ்
கொண்டு, சமயிகள்
பேதங்கள்
சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல்அணி
பைம்பொன் துழாய்என்றே
ஓதுமால்; ஊழ்வினை
யேன்தடந் தோளியே.
பொ-ரை :
ஊழ்வினையேனான என்னுடைய பெண்ணானவள், ‘சமயிகள் குற்றம் இல்லாத வளவிய கல்யாணகுணங்களைக்
கொண்டு ஒவ்வொரு குணத்திற்குரிய உயர்வின் பேதங்களைச் சொல்லிப் பிதற்றும்படியான
பிரானாகிய பரனுடைய திருவடிகளின்மேலே அணிந்த பசுமையான அழகிய திருத்துழாய்’ என்றே சொல்லாநின்றாள்.
வி-கு :
‘சமயிகள் வண்புகழ் கொண்டு பேதங்களைச் சொல்லிப் பிதற்றும் பரன்’ என்க. பிதற்றும் - பிதற்றப்படுகின்ற.
பிரான் -
_____________________________________________________
1. கோதை என்பது,
‘பூமாலை, பெண்களின் தலைமயிர், பெண்’ முதலிய பல
பொருள்களைக் குறிப்பதொரு பெயர்ச்சொல்.
முதல் இரண்டு
பொருள்களையும் அருளிச்செய்கிறார், ‘தன் மாலையையும்’ என்று தொடங்கி.
மூன்றாவது
பொருளை அருளிச்செய்கிறார், ‘இம்மாலையையுடைய இவள்’
என்று தொடங்கி. கோதை என்பது, பிராட்டி
தன்னைச் சொல்லுகிறதாகத்
திருவுள்ளம் பற்றிப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மார்வத்து மாலையான’
என்று தொடங்கி. மார்வத்து மாலை - பிராட்டி. ‘உன் திருமார்வத்து மாலை
நங்கை’ என்பது தமிழ்மறை.
(திருவாய். 10. 10 : 2.)
‘கோதை’
என்றதனை நோக்கி, ‘அம்மாலுக்கு மால் இவள்,’ என்கிறார்.
‘அவனுடைய வியாமோஹத்துக்கு விஷயமாயிருப்பவள்’
என்றபடி. மால் -
வியாமோகம்; எல்லார்க்கும் அறப்பெரியவன்.
|