உபக
உபகாரகன், ‘தடந்தோளி
ஓதும்’ என மாறுக. ஊழாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாய நியதி. தோளி
-தோளையுடையவள். ‘சமயிகள்’ என்றதன் பொருளை வியாக்கியானத்திற்காண்க.
ஈடு :
நாலாம் பாட்டு. 1‘பெருக்காறு வற்றினாற் போலே ஒருகால் எல்லாரையும் வாழ்வித்துப்
போன அவதாரங்களில் உள்ளதனை நான் இப்போது எங்கே தேடுவேன்?’ என்ன, ‘அது தவிருகிறேன்; என்றும்
ஒக்க ஓரே தன்மையனாய் இருக்கின்ற பரமபத நிலையன் திருவடிகளில் திருத்துழாய் பெறத் தட்டு என்?’
என்னாநின்றாள் என்கிறாள்.
கோது இல் -- குற்றம்
அற்ற; ‘குற்றங்கட்கு எதிர்த்தட்டான’ என்றபடி. குணத்திற்குக் கோது இல்லாமையாவது, ஒரு குணத்தை
அநுசந்தித்தால் மற்றைய குணங்களிற்போகாதபடி காற்கட்டுகை. 2அப்படி இராதாகில்,
அல்லாத விஷயங்களிற்காட்டில் வேற்றுமை இல்லையே அன்றோ? வண்புகழ் - கல்யாண குணங்கள். கொண்டு
- இக்குணங்களைச் சொல்லிக்கொண்டு. சமயிகள் - 3ஒரோ குணத்தில் கால் தாழ்ந்து
மற்றைய குணங்களில் போகமாட்டாதவர்கள்; என்றது, ‘சீல குணம் துவக்க வற்று; அதிலும் வீரகுணம்
துவக்க வற்று; அதிலும் உருவகுணமான அழகு முதலானவைகள் துவக்க வல்லன,’ என்று இவற்றிலே நிஷ்டரானவர்கள்
என்றபடி. இனி, சொன்ன இவர்களை ஒழிய, 4‘சத்வித்யா நிஷ்டர், தகரவித்யா நிஷ்டர்,
_____________________________________________________
1. ‘பரன் பாதங்கள்மேல்
அணி’ என்றது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘பெருக்காறு வற்றினாற்
போலே’ என்ற
இவ்விடத்தில் ‘பூகத ஜலம்போலே அந்தர்யாமித்வம்; ஆவரணஜலம் போலே
பரத்வம்;
பாற்கடல் போலே வியூகம்; பெருக்காறு போலே
விபவங்கள்;அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்,’
என்னும்
பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீ சூக்திகளை ஒப்பு நோக்குக.
(ஸ்ரீ வசன பூஷணம், உபாயப் பிரகரணம்,
சூ. 39.)
2. ’இப்படி இருக்க வேண்டுமோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அப்படி இராதாகில்’ என்று தொடங்கி.
3. ஈண்டுச் ‘சமயிகள்’
என்றது, குணநிஷ்டரான நித்திய முத்தர்களை.
4. ‘சர்வஜ்ஞத்வம்
முதலான குணங்களோடு கூடின சொரூபம் உபாசிக்கத்
தக்கது’ என்று கூறுபவர்கள் சத்வித்யா நிஷ்டர்.
‘குணமும் உபாசிக்கத்
தக்கது; சொரூபமும் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுமவர்கள் தகர வித்யா
நிஷ்டர்.
‘கண்களில் வசிக்கின்ற சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று
கூறுமவர்கள் உபகோசலவித்யா
நிஷ்டர். ‘உலகமே உருவாயுள்ள
சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் சாண்டில்ய
வித்யா
நிஷ்டர்.
|