முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
57

அழ

அழகையுடையவள், குணங்களுக்கு இருப்பிடமான அவன் திருவடிகளிலே திருத்துழாயை ஆசைப்படாநின்றாள். இத்தோள் அழகுக்கு இலக்கு ஆனாரோ, இவளோ, இப்படி அடைவு கெடப் பிதற்றுவார் என்பாள், ‘தடந்தோளி’ என்கிறாள்.

(4)

348

தோளிசேர் பின்னை பொருட்டுஎருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவல னார்,குடக் கூத்தனார்
தாள்இணை மேல்அணி தண்அம் துழாய்என்றே
நாளும்நாள் நைகின்ற தால்என்றன் மாதரே.

    பொ-ரை : ‘என்னுடைய பெண்ணானவள், ஒத்த தோள்களையுடையவளான நப்பின்னைப்பிராட்டி காரணமாக ஏழ் எருதுகளையும் தழுவிக்கொண்டவரும், ஆயர் வமிசத்தில் பிறந்தவரும், குடக்கூத்தை ஆடியவருமான கண்ணபிரானது இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய் என்றே நாளுக்குநாள் வருந்தாநின்றாள்,’ என்கிறாள்.

    வி-கு : தோளி - தோள்களையுடையவள். தழீஇ - தழுவி; சொல்லிசை அளபெடை. கோளியார் - கொண்டவர். ‘மாதர் நைகின்றது,’ என மாறுக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘எல்லா ஆத்துமாக்களுக்கும் பரனாய்ப் பரமபதத்தில் உள்ளவனாய்க் கிட்டுதற்குமுடியாதவனாய் இருக்கிறவன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாயை என்னால் தேடப்போமோ?’ என்ன, ‘ஆனால், இங்கே என்னைப் போன்றாள் ஒருத்திக்காகத் தன்னைப் பேணாதே எருது ஏழ் அடர்த்த கிருஷ்ணன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

    தோளி சேர் பின்னை - 2‘ஒத்த சீலம் வயது ஒழுக்கம் இவற்றையுடையவளும், ஒத்த குலம் இராஜ லக்ஷணம்

_____________________________________________________

1. ‘கோவலனார், குடக்கூத்தனார்’ என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார். மேற்பாசுரத்தில் பரமபதநாதனைச் சொன்ன
  பின்னர் இப்பாசுரத்தில் கிருஷ்ணாவதாரத்தை அருளிச்செய்வதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘எல்லா ஆத்துமாக்களுக்கும் பரனாய்’ என்று தொடங்கி.

2. ‘சேர் பின்னை’ என்னாது, ‘தோளி சேர் பின்னை’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார். ‘ஒத்த’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. சுந். 16 : 5.