முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
58

இவற

இவற்றையுடையவளுமான பிராட்டிக்குப் பெருமாள் தக்கவர்; பெருமாளுக்குப் பிராட்டியும் தக்கவள்,’ என்கிறபடியே, குடிப்பிறப்பு முதலியவைகளால் பெருமாளுக்கு ஒத்தவளாய்க் ‘கறுத்த கண்களையுடையவள்’ என்று அவரிலும் இவளுக்கு ஏற்றமானாற்போலே, மற்றை அழகு எல்லாம் கிருஷ்ணனோடு ஒத்திருக்கும்; தோள் அழகு அவனைக்காட்டிலும் இவளுக்கு விஞ்சி இருக்கும் ஆதலின், ‘தோளி’ என்கிறது. அவளுடைய அவயவ சோபையிலே தோற்று அத்தோளோடே அணைக்கைக்காக; எருது ஏழ் தழீஇக் கோளியார் - எருதுகள் ஏழனையும் தழுவிக் கொள்ளுமவர். அடுத்த கணத்திலே அவளைத் தழுவப் பார்க்கிறான் ஆகையாலே, அவளைத் தழுவினாற்போலே இருக்கிறதாயிற்று எருதுகளோடு பொருததும்; ஆகையாலே அன்றோ ‘எருது ஏழ் தழீஇ’ என்கிறது? அவளைப் பெறுகைக்குக் காரணம் ஆகையாலே, 1அவற்றின் கொம்போடே பொருததும் இக்கொம்போடே சேர்ந்தாற்போலே போக ரூபமாய் இருக்கிறபடி. கோவலனார் குடக்கூத்தனார் - அவளைப் பெறுகைக்குத் தகுதியான 2குடிப்பிறப்பையும் செருக்கையும் உடையவர். வில் முரித்தாலும் இக்ஷ்வாகு வமிசத்தார்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே, எருது ஏழ் அடர்த்தாலும் ஆய்க்குலத்தில் குறை உண்டாகில் பெண் கொடார்கள் அன்றே ஆயர்கள்? ஆதலின், அதனை அடுத்துக் ‘கோவலனார்’ என்கிறது.

    தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே - அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்பட்டது. நாளும் நாள் நைகின்றது - ஒருநாள் நைகைக்கும் 3ஆஸ்ரயம் இல்லாத மென்மையையுடையவள், நாள்தோறும் நையா நின்றாள். 4நைவதற்குரிய சரீரத்தையும் கொடுத்து நையப்

_____________________________________________________

1. அவற்றின் கொம்பு - இடபங்களின் கொம்பு. இக்கொம்பு -
  நப்பின்னைப்பிராட்டி.

2. ‘கோவலனார்’ என்றதனால் சாதி; ‘குடக்கூத்தனார்’ என்றதனால் செருக்கு.

3. ஆஸ்ரயம் - பற்றுக்கோடு; சரீரம்.

4. ‘ஒருநாள் நைகைக்கும் ஆஸ்ரயம் போராதாகில் நாள்தோறும்
  நையக்கூடுமோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘நைவதற்குரிய சரீரத்தையும் ‘கொடுத்து’ என்று
  தொடங்கி. ‘நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்’ என்பதூஉம் அது
  பற்றி வந்தது.