பண
பண்ணும் விஷயமே அன்றோ?
என்றன் மாதர் - 1என் பெண் பிள்ளை. அன்றிக்கே, தன்னைப்போலே பிறந்து விலங்கு
முரித்துக் கொண்டுபோய்ப் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் முதலானவைகளோடே பொருது,
2‘தழும்பு இருந்த தாள் சகடம் சாடி’ என்கிறபடியே, தழும்பு ஏறி இருப்பாள் ஒருத்தியோ என்
பெண்பிள்ளை என்பாள், ‘என்மாதர்’
என்கிறாள் என்னுதல். என்றது, 3‘தொடுங்கால் ஒசியும் இடை இளமான் அன்றோ?’ என்கிறாள்
என்றபடி.
(5)
349
மாதர்மா மண்மடந்
தைபொருட்டு ஏனமாய்,
ஆதிஅம் காலத்து
அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல்அணி
பைம்பொன் துழாய்என்றே
ஓதும்மால் எய்தினள்
என்றன் மடந்தையே.
பொ-ரை :
என்னுடைய பெண்ணானவள் காதலையுடைய பூமி தேவியின்பொருட்டுப் பண்டைக்காலத்தில் வராக அவதாரத்தைச்
செய்து அகன்ற பூ உலகத்தை ஒட்டு விடுவித்து எடுத்து வந்தவருடைய திருவடிகளின்மேலே அணிந்த பசிய
அழகிய திருத்துழாய் என்றே சொல்லும்படியான மயக்கத்தை அடைந்தாள்.
வி-கு :
‘ஆதி அம் காலத்து மாதர் மண் மடந்தை
பொருட்டு ஏனமாய் அகலிடம் கீண்டவர்’ என்க. ‘என்றன் மடந்தை மால் எய்தினள்,’ என மாறுக.
ஈடு :
ஆறாம் பாட்டு. 4‘மனிதத்தன்மை அழியாமல்
நப்பின்னைப்பிராட்டிக்கு உதவினாற்போல அன்றிக்கே,
_____________________________________________________
1. ‘மாதர்’ என்பதற்கு
இருபொருள்: ஒன்று, பெண் பிள்ளை; மற்றொன்று
மிருதுத்தன்மை. இவ்விரு பொருளையும் முறையே
அருளிச்செய்கின்றார்.
2. முதல் திருவந்தாதி,
23.
3. திருவிருத்தம்.
37.
4. கிருஷ்ணாவதாரத்துக்குப்
பின் வராஹ அவதாரத்தை அருளிச் செய்வதற்குப்
பிரயோஜனம் அருளிச்செய்கிறார். ‘மனிதத்தன்மை’
என்று தொடங்கி.
‘ஏனமாய்’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
அழிய மாறி
- மனிதத்தன்மையும் மாறி, என்றது, ‘விலங்காய் அவதரித்து’
என்றபடி.
|