ந
நில்லாத ஐஸ்வரியத்தைப்
பற்றி 1நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’
என்கிறார். ஓட - ‘இப்படி ஆளுவது எத்துணைக்காலம்?’ என்றால், நெடுங்காலம். என்றது,
‘அறுபதினாயிரம் யாண்டு’ என்கிறபடியே நெடுக என்றபடி. ‘இப்படி நெடுங்காலம் ஆள்வது எவ்வளவு?’ என்னில்,
உலகு - கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; 2‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ,
எங்கு மறைகின்றானோ, அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும் யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற
அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே, 3முந்திரிகை நிலம்
உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது. உடன் ஆண்டவர் - இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை
கிடவாதபடி ஆண்டவர் என்னுதல். அன்றிக்கே, 4‘பாப காரியங்களை நினைத்தவர்
முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக்கொண்டு போந்த கார்த்தவீரியார்ச்சுனனைப் போன்று
ஆண்டவர்கள்’ என்னுதல்.
‘இப்படிச் சக்கரவர்த்திகளாய்
இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’
என்னில், 5‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்யமுடியாததும் நாசத்தை
விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்; அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும்
விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே, அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்:
கருநாய் கவர்ந்த காலர் - ‘இப்படி நெடுநாள் மதிப்போடே வாழ்ந்து போந்தவன் எளிமைப்பட்டு
வாழ்கிறது
_____________________________________________________
1. ‘நீரிற் குமிழி இளமை,
நிறைசெல்வம்
நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள்’
என்றார் பிறரும்.
2. ஸ்ரீ விஷ்ணு புரா. 4. 2
- 65.
3. ‘எய்யென எழுபகை எங்கு
மின்மையான்
மொய்யெனத் தினவுறு
முழவுத் தோளினான்
வையக முழுவதும் வறிஞன் ஓம்புமோர்
செய்யெனக் காத்தினி
தரசு செய்கின்றான்.’
என்பர் கம்பநாட்டாழ்வார்.
(அரசியற்பட. 12)
4. இரகுவமிசம். சர்க்.
6.
5. ______
|