முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
60

ஸ்ரீபூம

ஸ்ரீபூமிப் பிராட்டிக்காகத் தன்னை அழிய மாறியும் உதவினவனுடைய திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்,’ என்கிறாள்.

    மாதர் - அழகு. 1நிருபாதிகமான பெண்மையையுடையவள் என்னுதல்; 2மாதர் என்று காதலாய், ‘சினேகத்தையுடையவள்’ என்னுதல். மா மண் மடந்தைபொருட்டு - ஏற்றத்தையுடையவளான ஸ்ரீபூமிப்பிராட்டியின்பொருட்டு. ஏனமாய் - 3‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே, காதலி உடம்பு பேணாமல் கிடக்க, காதலன் உடம்பு பேணி இருக்கை காதலுக்குத் தக்கது அன்றே? ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே, நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவையுடையவனாய். ஆதி -வராக கல்பத்தின் ஆதியிலே. அம் காலத்து - அழகிய காலத்தில் . 4காப்பாற்றுகின்ற சர்வேசுவரன் தன் விபூதியைக் காப்பதற்காகக் கொண்ட கோலத்தை அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது.

    அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் - பெரிய இவ்வுலகத்தை அண்டப்பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே 5‘அந்த வராக நயினாருடைய மயிர்க்கால்களில் உள்ள

_____________________________________________________

1. ‘நிருபாதிகம்’ என்றது, ‘அல்லாதாரைப் போன்று கர்மங் காரணமாக வந்தது
  அல்லாதது,’ என்றபடி.

2. ‘மாதர் காதல்’ என்பது தொல்காப்பியம் (சொல். உரி.)

3. நாய்ச்சியார் திருமொழி, 11. 8. இது, ‘ஏனம்’ என்றதன் தாத்பரியம்.
  ‘ஏனமாய்’ என்றதற்கு பாவம், ‘மாசுடம்பில்’ என்று தொடங்குவது.

4. ‘செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
  கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
  ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
  ஊழி யாவரும் உணரா
  ஆழி முதல்வ!நிற் பேணுதும் தொழுது.’

  என்பது, பரிபாடல், 2. 15 : 19.

5. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 4. 29.