மஹர
மஹரிஷிகள் துதி செய்கிறார்கள்,’
என்கிறபடியே, ‘சனகன் முதலானோர் இட்ட திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது. இதனையே எப்போதும்
சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள்,
‘மால் எய்தினள்’ என்கிறாள். என்றன் மடந்தையே
- ‘அவன் அன்றோ பிச்சு ஏறுவான்?’ என்று இருப்பவளாதலின்,
‘என் மடந்தை’
என்கிறாள். 1‘இப்பருவத்தைக் கண்டார்
படுமதனை இப்பருவமுடைய இவள் படுவதே!’ என்கிறாள்.
(6)
350
மடந்தையை வண்கம
லத்திரு மாதினைத்
தடங்கொள்தார்
மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடங்கொள்பூந்
தண்அம் துழாய்மலர்க் கேஇவள்
மடங்குமால்;
வாணுத லீர்!என் மடக்கொம்பே.
பொ-ரை :
ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்களே! என்னுடைய பெண்ணானவள், மடந்தைப் பருவத்தையுடையவளாகிய,
வளப்பம்பொருந்திய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரியபிராட்டியைப் பரந்த மாலையை அணிந்த
திருமார்பிலே வைத்த எம்பெருமானுடைய திருவடிகளின்மேலே அணிந்த தொடுக்கப்பட்ட பூக்களையுடைய
குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலர்க்கே இவள் சுருண்டு விழுகின்றாள்.
வி-கு :
‘என் மடக்கொம்பு இவள் துழாய் மலர்க்கே மடங்கும்,’ எனக்கூட்டுக. கொம்பு - ஆகுபெயர். ‘தார்
கொள் தடம் மார்பு’ என மாறுக.
ஈடு :
ஏழாம் பாட்டு. 2‘அமிர்தத்திற்காகத் திருப்பாற்கடலைக் கடைகிற காலத்திலே பெரிய
பிராட்டியாரைத் திருமார்பிலே வைத்தருளினவனுடைய திருவடிகளிற் சார்த்தின திருத்துழாயை ஆசைப்படாநின்றாள்,’
என்கிறாள்.
_____________________________________________________
1. ஈண்டு ‘மடந்தை’ என்றது,
பருவப்பெயர். பதினான்கு முதல் பத்தொன்பது
வரை வயதுள்ள பருவத்துப்பெண்.
2. நான்கு
அடிகளையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
அவதாரம் சொல்லி வருகிற பிரகரணமாகையாலே
இதுவும் ஓரவதாரமாக
வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி, அதற்குத் தக, ‘அமிர்தத்திற்காக’
என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
|