எப
எப்போது?’ என்பாள், ‘வாள்
நுதலீர்’ என்று விளிக்கிறாள். என் மடக்கொம்பே
‑ 1என்னைப் பிரியாமல் எல்லா அளவிலும் விகாரம் இல்லாதவளாய் இருக்குமவள் படும்
பாடே இது!
(7)
351
கொம்புபோல் சீதை பொருட்டு, இலங் கைநகர்
அம்புஎரி உய்த்தவர்
தாள்இணை மேல்அணி
வம்புஅவிழ் தண்அம்
துழாய்மலர்க் கேஇவள்
நம்புமால்; நான்இதற்கு
என்செய்கேன் நங்கைமீர்?
பொ-ரை :
பெண்களே! என் மகளாகிய இவள், பூங்கொம்பு போன்ற சீதாபிராட்டி காரணமாக இலங்கை நகரிலே
நெருப்பைச் சொரிகின்ற அம்பைச் செலுத்திய ஸ்ரீராமபிரானுடைய இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த
வாசனையோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலரையே விரும்பாநின்றாள்; இதற்கு நான்
என்ன செய்வேன்?
வி-கு :
‘நங்கைமீர்! இவள் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி துழாய் மலர்க்கே நம்பும்; என்
செய்கேன்?’ எனக்கூட்டுக. அம்பு எரி -ஆக்நேய அஸ்திரமுமாம். நம்புதல் - விரும்புதல்; ‘நம்பும்
மேவும் நசையா கும்மே,’ என்பது தொல்காப்பியம் (சொல்).
ஈடு :
எட்டாம் பாட்டு. 2‘ஸ்ரீஜனகராஜன் திருமகளுடைய விரோதியைப் போக்கின சக்கரவர்த்தி
திருமகன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்’ என்கிறாள்.
கொம்பு போல் -
‘வஞ்சிக்கொம்பு போலே’ என்னுதல்; 3‘அநந்யா - வேறுபட்டவள் ஆகேன்’ என்கிறபடியே,
ஒரு
_____________________________________________________
1. கொம்பு மரத்தைப்
பிரியாமல் இருப்பதாதலின், அதனைத் திருவுள்ளம் பற்றி,
‘என் கொம்பு’ என்பதற்கு ‘என்னைப்
பிரியாமல்’ என்று அருளிச்செய்கிறார்.
‘மடம்’ என்பதற்கு பாவம், ‘எல்லா அளவிலும்’ என்று தொடங்குவது.
மடமை - பற்றியது விடாமை.
2. ‘சீதைபொருட்டு இலங்கை
நகர் அம்பு எரி உய்த்தவர்’ என்றதனைக்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3.
ஸ்ரீராமா. சுந்.
21 : 15. ‘சூரியனுடைய ஒளியைப் போன்று ஸ்ரீராகவனை
விட்டுப் பிரியாமல் இருப்பவள் நான்,’ என்பது
அப்பகுதியின் பொருள்.
கொம்பு என்பது மரத்தினது ஓர் உறுப்பு ஆகையாலே, ‘ஒரு பொருளில்
ஒரு பகுதியான
உறுப்பு’ என்கிறார்.
|