முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
65

நம

    நம்புமால் - அதனை எப்போதும் விரும்பாநின்றாள். நான் இதற்கு என் செய்கேன் - 1ஸ்ரீகிருஷ்ணனைப்போலே ஊர்ப்பொது அன்றிக்கே, ஏகதார விரதனானவன் திருவடிகளில் திருத்துழாயை நான் எங்கே தேடும்படி? நங்கைமீர் - ‘நீங்கள் எல்லாவற்றாலும் நிறைந்தவர்களாய் இருக்க, இவள் இப்படிப் படுகிறபடி கண்டீர்கள் அன்றோ? இதற்கு ஒரு பரிகாரம் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறாள்.

(8)

352

நங்கைமீர்! நீரும்ஓர் பெண்பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை?
சங்குஎன்னும்; சக்கரம் என்னும்; துழாய்என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?

    பொ-ரை : பெண்மணிகாள்! நீங்களும் ஒவ்வொரு பெண்ணைப் பெற்று விரும்பி வளர்க்கிறீர்கள்; யான் பெற்ற பெண்ணினைக் குறித்து எந்த வகையில் பேசுவேன்? ‘சங்கு’ என்கிறாள்; ‘சக்கரம்’ என்கிறாள்; ‘துழாய்’ என்கிறாள்; இரவும் பகலும் இங்ஙனமே சொல்லுகின்றாள்; இதற்கு என் செய்வேன்?

    வி-கு : ‘இராப்பகல் இங்ஙனே சொல்லும்; என் செய்கேன்?’ என மாறுக. ‘என்னும், சொல்லும்’ என்பன, செய்யும் என் முற்றுகள்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 2‘அவனுடைய ஆயுதம் முதலானவைகளைக் காண வேண்டும்’ என்று சொல்லப்

_____________________________________________________

1. ‘திருத்துழாயை விரும்புகிறாள்’ என்பதற்குப் ‘புணர்ச்சியை விரும்புகிறாள்’
  என்பது பொருளாதலின், அதனைத் திருவுள்ளம் பற்றி, ‘ஏகதார விரதன்
  இவள் புணர்ச்சிக்கு இசையப்போகின்றானோ?’ என்பது தாயாருடைய
  உட்கோள் என்பதனைத் தெரிவிக்கின்றார், ‘ஸ்ரீகிருஷ்ணனைப் போலே’
  என்று தொடங்கி.

  ‘வந்துஎ னைக்கரம் பற்றிய வைகல்வாய்
  இந்த இப்பிற விக்குஇரு மாதரைச்
  சிந்தை யாலும் தொடேன்என்ற செவ்வரம்
  தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்.’

  என்ற கம்பராமாயணச் செய்யுளை (சுந். சூடாமணிப். 34.) ஈண்டு நினைவு
  கூர்க.

2. ‘சங்கு என்னும், சக்கரம் என்னும்’ என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.