முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
66

புக

புக்கு, முடியச் சொல்ல மாட்டாதே நோவுபடாநின்றாள்,’ என்கிறாள்.

    நங்கைமீர் - 1உங்கள் நிறைவு, இவள் படுகிற பாடு நான் சொல்லக் கேட்டு அறிய வேண்டி இருக்கிறது அன்றோ உங்களுக்கு? நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் - நீங்களும் ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்க்கின்றீர்கள் அன்றோ? நல்குகை - வளர்க்கை. 2இவள் பட்டது பட்டார் உளரோ? ‘எங்கள் பெண்பிள்ளைகளைக்காட்டிலும் உன் பெண்பிள்ளைக்கு வாசி என்?’ என்னில், எங்ஙனே சொல்லுகேன் - இவள் படி பேச்சுக்கு நிலம் ஆகில் அன்றோ நான் சொல்லுவது? என்றது, 3‘மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் வேதவாக்குகள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்புகின்றன,’ என்கிற பகவானுடைய குணங்களை நிலமாகப் பேசிலும், நற்குணக் கடலிலே ஆடுகின்றவர்களுடைய (ஆழ்வார்களுடைய) படி பேச்சுக்கு நிலம் அன்றே?’ என்றபடி. 4‘பகவானுடைய குணங்களில் ஈடுபட்டவனாய் எல்லாராலும் எப்பொழுதும் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான்’ என்கிறபடியே, கண்டிருக்கும் அத்தனை போக்கிப் பேச முடியாது. 5‘என் ஒருவனிடத்திலேயே பத்தியுடைய ஞான சிரேஷ்டன் ஆகிறான்; அத்தகைய ஞானிக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன்; அவனும் எனக்குப் பிரியமுள்ளவன்,’ என்பதே அன்றோ அவன் வார்த்தையும்? தேசத்தாலும் காலத்தாலும் கைகழிந்த பொருள்களை

______________________________________________________

1. ‘நங்கைமீர்!’ என்ற விளிக்கு பாவம், ‘உங்கள் நிறைவு’ என்று தொடங்கும்
  வாக்கியம். ‘நிறைவு’ என்றது, ஞானத்தின் நிறைவினை.

2. ‘பெண் பெற்று நல்கினீர்’ என்பதற்கு பாவம், ‘இவள் பட்டது’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

3. தைத்திரீய உப. ஆந. 9 : 1. ‘மனத்தாலும்’ என்று தொடங்கும் வாக்கியம்,
  ஸ்வாபதேசம்.

4. ‘பேச்சுக்கு நிலமன்று’ என்றதனால் போதரும் பொருளை
  அருளிச்செய்கிறார், ‘பகவானுடைய’ என்று தொடங்கி. இது ஸ்ரீவிஷ்ணு
  தத்துவம்.

5. நற்குணக்கடலிலே ஆடுகின்ற ஆழ்வார்களுடைய படி பேச முடியாமைக்குப்
  பகவானுடைய வார்த்தையையும் காட்டுகிறார், ‘என் ஒருவன்’ என்று
  தொடங்கி. இது,  ஸ்ரீகீதை. 7 : 17.