முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
67

அந

அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூடினதாகப் பெறவேண்டும் என்கிற இவள் படி என்னாலே பேசலாய் இருந்ததோ? ஆயினும், எங்களைக்காட்டிலும் நீ அண்மையில் இருப்பவள் அன்றோ? தெரிந்தமட்டு அதனைச் சொல்லிக்காணாய்’ என்ன, 1கைமேலே சொல்லுகிறாள் :

    சங்கு என்னும் - 2மலையை எடுத்தாற்போலே பெருவருத்தத்தோடே சங்கு என்னும். அது பொறுத்தவாறே, சக்கரம் என்னும் - 3மீளவும் மாட்டுகின்றிலள், சொல்லவும் மாட்டுகின்றிலள். இரண்டற்கும் நடுவே கிடக்கிற மாலையை நினைத்து, துழாய் என்னும் - 4‘சங்கு சக்கரங்கள்’ என்றும், 5‘கூரார் ஆழி வெண்சங்கு’ என்றும் சொல்லமாட்டுகின்றிலள். 6ஆபத்து மிக்கவாறே ஒருத்தி, ‘சங்க சக்ர கதா பாணே - சங்கையும் சக்கரத்தையும் கதையையும் கைகளில் தரித்திருப்பவனே!’ என்றாள் அன்றோ? இங்ஙனே சொல்லும் -சொல்லத் தொடங்குவது, சொல்லித் தலைக்கட்டமாட்டாது ஒழிவதாய்ப் படாநின்றாள். ‘இப்படிச் சொல்லுவது எத்தனை போது?’ என்னில்,

_____________________________________________________

1. ‘கைமேலே’ என்றது, சிலேடை : ‘திருக்கைகளிலுள்ள திவ்ய ஆயுதங்கள்’
  என்பதும், ‘கையிலுடையதாக’ என்பதும் பொருள்.

2. ‘என்னும் என்னும்’ என்பதற்கு பாவம், ‘மாலையை எடுத்தாற்போலே’
  என்பது.

3. ‘ஏழை ஆகையாலே, மீளவும் மாட்டுகின்றிலள்; வலி இல்லாமையாலே
  சொல்லவும் மாட்டுகின்றிலள்,’ என்பதாம். இரண்டற்கும் நடுவே - சங்கு
  சக்கரங்களுக்கு நடுவே.

4. திருவாய்மொழி, 7. 2 : 1.

5. திருவாய்மொழி, 6. 9 : 1.

6. ‘சங்கு சக்கரங்கள் என்று சேர்த்துச்சொல்லிய பேர் உண்டோ?’ என்னும்
  வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சங்க சக்ர’ என்று தொடங்கி. இது,
  துச்சாதனனால் துகில் உரியப்படுகின்ற காலத்தில் திரௌபதி கூறியது.

  “சங்கசக்ர கதாபாணே துவாரகா நிலைய அச்சுத
   கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதாம்”

  என்பது அந்தச் சுலோகம். இதனை இங்குப் பிரமாணமாக எடுத்தது,
  ஆபத்து மிக்கவர்கள் எல்லாம் விரோதிகளை அழிக்கக் கூடியவைகளான
  இந்தச் சங்க சக்கரங்களைச் சொல்லுதலே மரபு என்று காட்டுவதற்காக.