உனக
உனக்கு?’ என்றவர்களைக்
குறித்து, ‘நான் சொல்லிற்றுக் கேளாதே அவனையே ஆசைப்பட்டு மிகவும் மயங்காநின்றாள்,’ என்கிறாள்.
என்செய்கேன் -
இவள் நிலை இருந்தபடியால் இவளைக் கிடையாததாய் இருந்தது; நான் எங்ஙனே வாழக்கடவேன்? என்னுடைப்
பேதை - நான் சொல்லும் நல்வார்த்தைகளைக் கேட்கும் பருவம் அல்லள். என் கோமளம் - ‘நான்
சொன்ன நல்வார்த்தையைக் கேட்டிலள்’ என்று கைவிட ஒண்ணாதபடி வியசனத்தைப் பொறுக்க முடியாத மென்மையையுடையவள்.
என் சொல்லும் அல்லள் என் வசமும் அல்லள் - நான் சொன்ன நல்வார்த்தைகளைக் கேட்பதும் செய்யாள்;
நான் நலம் சொல்லலாம்படி இருப்பதும் செய்யாள். 1நங்கைமீர் - இதில் நீங்கள்
அறியாதன இல்லை அன்றே?
மின் செய் பூண்
மார்பினன் கண்ணன் கழல் துழாய் - மின்னுகின்ற ஸ்ரீ கௌஸ்துபத்தை மார்விலேயுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளில்
திருத்துழாய். பொன் செய் பூண் மென்முலைக்கு - பொன்னாலே செய்த ஆபரணங்களையுடைத்தாய் விரக
தாபத்தைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாத முலைக்கு. அன்றிக்கே, பொன்செய்திருக்கை - பசலை பூத்திருக்கை’
என்னுதல்; 2‘மென்முலை பொன் பயந்திருந்த’ என்னக் கடவது அன்றோ? ‘அந்தப்
பசலையினையே ஆபரணமாகவுடைய முலை’ என்றபடி. 3‘நிந்திக்கப் படாதவள்’ என்னுமாறு
போலே. அவன் புருஷத் தன்மைக்கு இலக்கணமான கௌஸ்துபம் போலே ஆயிற்று, பெண் தன்மைக்கும்
பசலை; ஆதலின், ‘மின் செய் பூண் மார்பினன்
- பொன் செய்பூண் முலை’ என்று விசேடித்துக்
_____________________________________________________
1. ‘நங்கைமீர்’ என்றது,
ஞான நிறைவு சொல்லுகிறது.
2. பெரிய திருமொழி,
2. 7 : 6. இது, பொன் என்ற சொல் பசலை என்னும்
பொருளில் வருவதற்கு மேற்கோள்.
3. பசலையே ஆபரணமாக
இருத்தற்கு மேற்கோள், ‘நிந்திக்கப்படாதவள்’
என்பது. இது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
என்றது, பெருமாளைப் பிரிந்து அழகு
அழிந்திருக்கிற நிலையிலே பிராட்டியை ‘நிந்திக்கப்படாதவள்’
என்று
ஸ்ரீவால்மீகி பகவான் கூறுவதால், பசலை நிறமும் ஆபரணமாக இருக்கும்
என்பது கருத்து. பசலையாவது,
பிரிவாற்றாமையான் வருவதோர்
நிறவேறுபாடு. இந்நிறம் பீர்க்கம்பூவின் நிறத்தைப்போன்றது என்பர்.
|