கூறுக
கூறுகின்றாள். 1காதலனைப்
பிரிந்ததால் உளதாய விரகத்தில் இப்படிப் பொன் பயக்கையே அன்றோ பெண் தன்மைக்கு இலக்கணம்?
2தனம் படைத்தாரில் இவளைப் போன்று தனம் படைத்தார் உளரோ? 3‘தன்
காதலனைப் பிரியமாட்டாமையாலே பொன் இட்டுக்கொள்ளுகிறது’ என்பாள், ‘மென்முலை’
என்கிறாள். மெலியும் - ‘மென்முலைக்கு வேண்டும்’ என்று சொல்லப்புக்கு மெலிவோடே தலைக்கட்டும்.
(10)
354
மெலியும்நோய் தீர்க்கும்நம்
கண்ணன் கழல்கள்மேல்
மலிபுகழ் வண்குரு கூர்ச்சட
கோபன்சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து
இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு
ஆவர்நற் கோவையே.
பொ-ரை :
பிரிவால் மெலிகின்ற விரக நோயினைத் தீர்க்கின்ற நம் கண்ணபிரானுடைய திருவடிகளின்மேல்
மிக்க புகழையுடைய வளவிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச்செய்யப்பட்ட ஒலி
புகழ் ஆயிரம் திருப்பாசுரங்களில் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் மிக்க
புகழையுடைய நித்தியசூரிகளோடு ஒரு கோவை ஆவார்கள்.
வி-கு :
ஒலி புகழ் - பேசப்படும் புகழ். ‘வல்லவர் நற்கோவை ஆவர்,’ என்க. கோவை ஆதல் - சேர்ந்தவர்
ஆதல்.
ஈடு :
முடிவில், 4‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் நித்தியசூரிகளோடு ஒத்தவர்
ஆவர்,’ என்கிறார்.
_____________________________________________________
1. இதனைத் திருக்குறளில்
‘பசப்புறு பருவரல்’ என்ற அதிகாரத்தால் அறிதல்
தகும்.
2. ரசோக்தி.
3. “பொன்செய் பூண்முலை’
என்ற போதே இளைப்புச் சித்தமாயிருக்க,
மீண்டும் ‘மென்முலை’ என்கிறது என்?’ என்னும் வினாவைத்
திருவுள்ளம்
பற்றி, அதற்கு விடையாகத் ‘தன் காதலனை’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
‘பொன் இட்டுக்கொள்ளுகிறது’ என்றது, தன் கணவன்
பார்க்கவேண்டும் என்று பொன்னைப் பூட்டிக்
கொள்ளுகிறது’ என்றபடி.
4. ‘வானவர்க்கு நற்கோவை
ஆவர்’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘நித்திய சூரிகளோடு ஒத்தவராவர்’
என்னும்
இவ்விடத்து,
‘வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்
படும்.’
என்ற திருக்குறள் நினைவிற்கு
வருகிறது.
|