New Page 1
கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே,
வேறு ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.
திருமலை நம்பி, ஒருவன் ஒன்றை விரும்பினால், அவனும் அது செய்வானாய்த் தலை
துலுக்கினால், பின்பு பின்னில் இழவு தோன்றாதே அன்றோ இருப்பது? ஆகையாலே, அவனும் ‘அப்படிச்
செய்கிறோம்’ என்ன, மேல் உண்டான இழவு மறந்து, எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்,’ என்று
அருளிச்செய்வர். 1ஸ்ரீ கௌசல்யையார், பெருமாள் வனத்திற்கு எழுந்தருளுகிற போது,
‘ஒரே புதல்வனையுடைய நான் உம்மைப் பிரிந்திருக்க மாட்டேன்! கூட வருவேன் இத்தனை!’ என்ன,
‘ஆச்சி, நீர் சொல்லுகிற இது தர்மத்திற்கு விரோதம் கண்டீர்,’ என்று முகத்தைப் பார்த்து ஒரு
வார்த்தை அருளிச்செய்ய, இழவை மறந்து மங்களாசாசனம் பண்ணி
_____________________________________________________
1. ‘தலையை அசைத்தால் பெற்றது போன்று ஆகுமோ?’ என்னும்
வினாவைத்
திருவுள்ளம் பற்றி, பெற்றது போன்று ஆகும் என்பதற்கு இரண்டு
திருஷ்டாந்தங்கள் காட்டுகிறார்,
‘ஸ்ரீகௌசல்யை யார்’ என்று தொடங்கி.
இது, பேச்சின் இனிமை விசுவாசத்திற்குக் காரணம் என்பதற்குத்
திருஷ்டாந்தம்.
‘ஒரே புதல்வனையுடைய நான்’
என்று தொடங்குமிவ்விடத்தில்,
‘ஆகி னைய! அரசன்றன்
ஆணையால்
ஏகல் என்பது யானு
முரைக்கிலென்;
சாக லாஉயிர் தாங்கவல்
லேனையும்
போகில் நின்னொடுங்
கொண்டனை போகென்றாள்.’
என்ற செய்யுளையும், ‘ஆச்சி! நீர்
சொல்லுகிற இது’ என்று
தொடங்குமிடத்தில்
‘என்னை நீங்கி
இடர்க்கடல் வைகுறும்
மன்னர் மன்னனை
வற்புறுத் தாதுடன்
துன்னு கானம் தொடரத்
துணிவதோ?
அன்னை யே!அறம்
பார்க்கிலை யாமென்றான்.’
‘வரிவில் எம்பி
மண்ணர சாயவற்கு
உரிமை மாநிலம்
உற்றபின் கொற்றவன்
திருவின் நீங்கித்
தவம்செயு நாளுடன்
அருமை நோன்புகள்
ஆற்றுதி யாமன்றே!’
என்ற செய்யுள்களையும் ஒப்பு நோக்கல்
தகும்.
|