பூசும
பூசும் சாந்து என் நெஞ்சமே
- 1‘‘சர்வகந்த :’ என்கிற திருமேனியை உடையவனுக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம்
ஆவதே! இது சேருமே!’ என்கிறார்.
(2)
357
ஏக மூர்த்தி இருமூர்த்தி
மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய்
இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள்
துயின்ற நாரா யணனே!உன்
ஆக முற்றும் அகத்துஅடக்கி
ஆவி அல்லல் மாய்த்ததே.
பொ-ரை :
‘ஒரு மூர்த்தியாகி இருமூர்த்தியாகி மும்மூர்த்தியாகிப் பல மூர்த்தியாகி ஐம்பூதங்களாகி
இருசுடர்களான சூரிய சந்திரர்களாகி இவற்றுக்கு உள்ளுயிராகித் திருப்பாற்கடலின் நடுவில் ஆதிசேஷனாகிய
படுக்கையின்மேலே ஏறி யோகநித்திரை செய்கின்ற நாராயணனே! உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து
பூமாலை முதலிய இன்பப்பொருள்கள் எல்லாம் என்னுள்ளேயாம்படி செய்து உன் திருவுள்ளமானது துன்பத்தை
நீக்கியது,’ என்கிறார். என்றது, ‘ஒருபடி கரை மரம் சேர்க்க வல்லனே’ என்று இருந்த உன்னுடைய திருவுள்ளத்தில்
துன்பம் கெட்டு, கிருதார்த்தன் ஆனாயே!’ என்றபடி.
வி-கு :
ஆவி - ஈண்டு, மனம். ‘ஆவி அடக்கி அல்லலை மாய்த்தது’ என்க.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 2‘இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக்கிருத்தியன் ஆனாயே!’
என்கிறார்.
ஏகமூர்த்தி -
3‘சோமபானம் செய்தற்குரிய சுவேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு
முன்னே ‘சத்’ என்று சொல்லக்கூடியதாயும் நாமரூபங்கள் இன்மையால் ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு
பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே, படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற
சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும், அழிந்து ‘சத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய்
நீறு பூத்த நெருப்புப்போலே
_____________________________________________________
1. ‘நெஞ்சமே’ என்ற ஏகாரத்திற்கு
பாவம், ‘சர்வகந்த :’ என்று தொடங்கும்
வாக்கியம். ‘சேருமே’ என்றது, ‘சேராது’ என்றபடி.
2. ‘ஆவி அல்லல் மாய்த்ததே’
என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார். கிருதக்கிருத்யன் - செய்ய வேண்டிய
காரியங்களையெல்லாம் செய்து முடித்தவன்.
3.
சாபால உபநி. 6. 2 : 1.
|