முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
85

New Page 2

சொல்லுகிறது; சாத்துவிக அகங்காரத்தின் காரியம், பதினோரிந்திரியங்கள்; தாமச அகங்காரத்தின் காரியம், மண் முதலான ஐம்பெரும்பூதங்கள்; இரண்டற்கும் உபகாரமாய் நிற்கும், இராஜச அகங்காரம்; ஆக பதினோரிந்திரியங்களையும், குணங்களோடு கூடிய ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.

    இரண்டு சுடராய் - 1‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது. இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம். அருவாகி - 2‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும் பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ்வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ‘நன்று; மேலே, அசித்தை அருளிச்செய்தாராதலின், அங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல் ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், 3‘இந்த ஆத்துமாக்களை எல்லாம்

_____________________________________________________

1. தைத்திரீய உபநிட, 1.

      ‘ஐந்து பூதமாய்’ என்றது முடிய, சமஷ்டி சிருஷ்டியை அருளிச்செய்தது.
  ‘இரண்டு சுடராய்’ என்றது முதல் வியஷ்டி சிருஷ்டியை அருளிச்செய்தபடி.
  சமஷ்டி - கூட்டம். வியஷ்டி - வேறு வேறு.

2. தைத்திரீய ஆனந். 6.

3. சாந்தோக்ய உபநிட, 6 : 3.

      அரு என்பதற்கு  ஆத்துமா என்று பொருள் கூறில், அநுப்பிரவேசம்
  சித்தியாமையாலும், அநுப்பிரவேசத்தைச் சொல்லுகிறவிடத்தில் ஜீவனுக்கு
  அந்தரியாமியாய் இருக்கிற இறைவனுக்கு அநுப்பிரவேசமாகையாலே
 
ஆத்துமா சித்திக்கையாலும் அநுப்பிரவேசத்தையே சொல்லுகிறது என்றபடி.