சர
சரீரமாகவுடைய நான்
அந்தரியாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த ஆத்துமாக்களையெல்லாம்
சரீரமாகவுடைய சர்வேசுவரனுக்கு அநுப்பிரவேசமாகையாலே அப்பொருளும் சொல்லிற்றாயிற்று.
நாகம் ஏறி நடுக்கடலுள்
துயின்ற நாராயணனே - 1தன்னால் படைக்கப்பட்ட பிரமன் முதலானோர்கட்குப் பற்றப்படுமவன்
ஆகைக்காகத் திருப்பாற்கடலின் நடுவில் திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளினவனே! அன்றிக்கே,
‘பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறுபோன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக்
கண்வளர்ந்தருளுகின்றவனே!’ என்னவுமாம். ‘இப்படி எல்லாக் காலமும் ஒரு படிப்படத் திருவருள் புரிதலையே
இயல்பாகவுடையன் ஆகைக்கு அடியான சம்பந்தத்தையுடையவன்’ என்பார், ‘நாராயணனே’ என்கிறார்.
உன் ஆகம் முற்றும்
- உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை பரிவட்டம் ஆபரணங்கள் இவையெல்லாம். அகத்து அடக்கி
- என்னுள்ளே உண்டாம்படி செய்து. 2‘இதுவே அன்றோ படைப்புக்குப் பிரயோஜனம்? இப்படிச்
செய்த காரணத்தால் துக்கம் இல்லாதவர் ஆனார் யார்?’ என்னில், ‘அவன்’ என்கிறார் மேல்;
ஆவி அல்லல் மாய்த்தது - உன் திருவுள்ளத்தில் உண்டான துன்பம் ஒருபடி அழியப்பெற்றதே! என்றது,
3‘இத்தலையை
_____________________________________________________
1. படைப்புக்குப் பின்னர், திருப்பாற்கடலில்
சயனித்திருத்தலை
அருளிச்செய்வதற்கு இரண்டு வகையான கருத்து அருளிச்செய்கிறார்:
‘தன்னால் படைக்கப்பட்ட’ என்று தொடங்கி. கம்பராமாயணம், திருவவதாரப்
படலம், 6 முதல் 24 முடிய உள்ள
செய்யுள்களில் முதற் கருத்தின்
பொருளைக் காணலாகும்.
2. ‘காதல் குணத்தைச்
சொல்லுகின்ற இவ்விடத்தில், சிருஷ்டியைச்
சொல்லுவான் என்?’ என்னும் வினாவிற்கு விடை
அருளிச் செய்கிறார்,
‘இதுவே யன்றோ’ என்று தொடங்கி. என்றது, ‘இப்படி
விநியோகங்கொள்ளுகையே
சிருஷ்டிக்குப் பிரயோஜனம் என்று
தோன்றுகைக்காக அருளிச்செய்கிறார்,’ என்றபடி.
3. ‘இத்தலையை’ என்றது,
ஆழ்வாரை. கரை மரம் சேர்த்தல் - கடலிலுள்ள
மரத்தைக் கரையிலே சேர்த்தல்; மரம் - கப்பல்.
என்றது, ‘பேற்றைப்
பெறும்படி’ செய்தான் என்றபடி.
|