ஒ
ஒருபடி கரைமரஞ் சேர்த்து
நீ கிருதக்கிருத்யன் ஆனாயே!’ என்றபடி. அன்றிக்கே, 1‘என் உள்ளமானது துக்கம் இல்லாததாயிற்று,’
என்னுலுமாம்.
2இனி,
இப்பாசுரத்திற்கு, ‘ஏகமூர்த்தி என்பது, பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்றும், ‘இருமூர்த்தி’
என்பது, வியூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாசுதேவ சங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும்,
‘மூன்று மூர்த்தி என்பது, ‘வியூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும்,
‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும், 3‘ஐந்து பூதமாய் இரண்டு
சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது, இன்னார் படைப்புக்குக்
கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பார்கள்
உளர்.
(3)
358
மாய்த்தல் எண்ணி
‘வாய்முலை
தந்த மாயப்
பேய்உயிர்
மாய்த்த ஆய மாயனே!
வாஅ மனனே!
மாதவா!
_____________________________________________________
1. ‘இன்னார் ஆவி’ என்னாது,
பொதுவாக ‘ஆவி’ என்றதனால் ‘என்
உள்ளமானது துக்கமில்லாததாயிற்று என்னலுமாம்,’ என்கிறார்.
2. இத்திருப்பாசுரத்திற்குப்
பிறர் கூறும் பொருளையும் அருளிச் செய்கிறார்,
‘இனி’ என்று தொடங்கி.
3. ‘ஐந்து பூதமாய்
இரண்டு சுடராய் அருவாகி’ என்றதனால், இன்னார்
படைப்புக்குக் கடவர் என்றும், ‘நாகமேறி நடுக்கடலுள்
துயின்ற
நாராயணனே’ என்றதனால், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்றும்
பிரித்துக் கூட்டிக்கொள்க.
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’
என்றது, சிருஷ்டியைக் கூறுவதனால், மேலே கூறிய பிரத்யும்நரது
தொழிலாகிய சிருஷ்டியைக் கூறுகின்றது என்பது பொருள். ‘நாகமேறி
நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’
என்பது, ‘அநிருத்தரையும் அவருடைய
காரியமான பாதுகாத்தலையும் கூறுகின்றது’ என்பது பொருள்.
‘ஆயின்,
சங்கர்ஷணருடைய தொழிலாகிய சம்ஹாரத்தைக் கூறவில்லையே?’ எனின்,
‘அழித்தலானது,
படைத்தற்றொழிலில் லயப்பட்டிருப்பது ஒன்றாகையால்,
அது, பொருளாற்றலால் தானே சித்திக்கும்’
என்க.
‘உளர்’ என்பதனாலே,
இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத்
திருவுள்ளம் அன்று என்பது போதரும்.
|