ஓர
ஓர் உயிரே அன்றோ அவன்?
1‘நம்மைக் கொல்ல வருகின்றான்; சந்தேகம் இல்லை,’ என்றாரே அன்றோ மஹாராஜர்?
ஆக, ‘அவள் கோலி வந்த படி அவசியம் சிலர் பரியவேண்டியதாக இருந்ததாதலின்’ ‘மாய்த்தல்
எண்ணி’ என்கிறார் என்றபடி. வாய் முலை தந்த - 2அவன் திருப்பவளத்திலே நஞ்சினைக்
கொடுத்தாற்போலே இருக்கையாலே ‘தந்த’ என்கிறார். அன்றிக்கே, ‘தருகையும் கொடுக்கையும்
ஒரு பொருட்சொற்களாய், கொடுத்த என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது,’ என்னுதல். மாயப் பேய்
- 3பிறவியால் வந்த அறிவு கேட்டுக்குமேலே, வஞ்சனையையுடையளாயும் வந்தாள்; என்றது,
‘பேயாய் வருகை அன்றிக்கே, தாயாயும் வந்தாள்,’ என்றபடி. 4‘தாயாய் வந்த பேய்’
என்றார் திருமங்கை மன்னன். உயிர் மாய்த்த - 5அவள் கோலி வந்ததனை
அவள் தன்னோடே போக்கினபடி. மாய ஆயனே - ஆச்சரியமான ஆற்றலை
_____________________________________________________
1. ‘ஸ்ரீகிருஷ்ணனைக்
கொல்ல வந்தது, தம்மைக் கொல்ல வந்ததாகத்
திருவுள்ளம் பற்றி, ‘மாய்த்தல் எண்ணி’ என்றார்
என்னலுமாம்’ என்று
பொருள் கூறத் திருவுள்ளம் பற்றி அப்பொருளுக்குப் பிரமாணம்
காட்டுகிறார்,
‘நம்மைக் கொல்ல வருகின்றான்’ என்று தொடங்கி. இது,
விபீஷணனைக் குறித்துச் சுக்கிரீவன் கூறியது.
ஸ்ரீராமா. யுத். 17 : 5.
2. ‘தந்த’ என்பதற்கு,
இரண்டு வகையாகக் கருத்து அருளிச் செய்கிறார்,
‘அவன் திருப்பவளத்திலே’ என்று தொடங்கி. திருப்பவளம்
- வாய்.
‘செலவினும் வரவினும்
தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்று
மந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை
படர்க்கை என்னும்
அம்மூ விடத்தும்
உரிய என்ப.’
‘அவற்றுள்,
தருசொல்
வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை
ஆயீ ரிடத்த.’
என்பது இலக்கணம்.
(தொல். சொல், 29, 30.)
3. ‘பேய்’ என்னாது,
‘மாயப் பேய்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘பிறவியால் வந்த’ என்று தொடங்கி.
4. பெரிய திருமொழி,
1. 5 : 6.
5. ‘மாய்த்தல்
எண்ணி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் பொருள்
அருளிச்செய்கிறார், ‘அவள் கோலி வந்ததனை’
என்று தொடங்கி.
|