முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
9

இணை அடி’ என்றும், 1‘அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும். இதனால், 2ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக்கதி இல்லை என்பது போதரும்; 3‘ஓட்டு ஊண் ஒழித்தவன்’ அன்றோ? தாள் - 4‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன, ‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்? அப்படித் 5தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை  6‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ? காலம் பெற - அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; 7‘வாழ்வு சாதலை முடிவாக உடையது; உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன; செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த எவன்தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின், நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார். அன்றிக்கே, 8‘ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கணநேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு? அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி - இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது; கேடு வருகைக்கு

_____________________________________________________

1. இது, மச்ச புராணம்.

2. ரசோக்தியாக, பாவம் அருளிச்செய்கிறார், ‘அதனால், ஓடு கொண்டு
  இரப்பார்க்கெல்லாம்’ என்று தொடங்கி.

3. ‘நக்கன், ஊன்முகமார் தலையோட்டுஊண் ஒழித்த எந்தை’ என்பது
  அப்பாசுரப் பகுதி. பெரிய திருமொழி, 3. 4 : 2.

4. ஸ்ரீராமா. அயோத். 98 : 8. 

5. தலையாக - தலையிலே ஆம்படியாக.

6. மேலே காட்டியதற்குப் பிரமாணம் ‘அடி சூடும் அரசு’ என்பது. இது,
  பெருமாள் திரு. 10 : 7.

7. ‘அற்கா வியல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
  அற்குப வாங்கே செயல்.’
  ‘நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
  மேற்சென்று செய்யப் படும்.’

  என்பன திருக்குறள்.