முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
93

1ஒ

    1ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான், திருப் பரிவட்டங்களை அழகியதாக வாட்டிக்கொண்டு வந்து எம்பெருமானார்க்குக் காட்ட, மிக உவந்தாராய் அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு, ‘நாயன்தே! இவன் திருஅரைக்குத் தகுதியாம்படி வாட்டினபடி திருக்கண்சார்த்தி அருளவேண்டும்’ என்று இவற்றைக் காட்டியருள, கண்டு உவந்தருளி, உடையவரை அருள்பாடு இட்டருளி, ‘இவனுக்காக ரஜகன், நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமாயருளினார். அன்றிக்கே, ‘ஏலும் ஆடையும் அஃதே’ என்பதற்கு, 2‘சிறந்த பொன்னாடை’ என்கிறபடியே, ‘புருடோத்தமனுக்கு இலக்கணமான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்’ என்னலுமாம். இவர் பல காலம் கூடிப் பண்ணுகிற திரு ஆபரணமும் திருப்பரிவட்டமும் அன்றோ? 3‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்கிறபடியே, இவருடைய அன்பு அடியே தொடங்கியுள்ளது அன்றோ? ‘இது கூடுமோ?’ என்று சந்தேகிக்க வேண்டா; இவை 4‘பொய்யில் பாடல்’ ஆகையாலே கூடும்.

    மூ உலகும் நண்ணி நவிற்றும் கீர்த்தியும் அஃதே - விசேடஜ்ஞர் அன்றிக்கே, மூன்று உலகத்துள்ளாரும் வந்து கிட்டிக் கடல் கிளர்ந்தாற்போலே துதிக்கிற கீர்த்தியும் அந்த அன்பேயாம். 5‘இவர் காதலித்த பின்னர் வேறு பொருள்களிலே நோக்குள்ளவர்களும் அப்பொருள்களில் நோக்கு இல்லாதவர்களாகி ஏத்தாநின்றார்கள்.’ என்றாயிற்று

_____________________________________________________

1. ‘திருவரைக்குத் தகுதியான’ என்பதற்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார்,
  ‘ஒருநாள்’ என்று தொடங்கி. ரஜகன் - வண்ணான். ‘நம் திறத்தில் செய்த’
  என்றது, கிருஷ்ணாவதாரத்தில் வண்ணான் செய்த தவற்றினை.

2. பிருஹதாரண்ய உபநிடதம், 4 : 3.

3. திருவாய்மொழி, 2. 3 : 3.

4. திருவாய்மொழி, 4. 3 : 11.

5. ‘பிரயோஜனத்தை விரும்புகிறவர்கள் துதிக்கிற கீர்த்தியை அநந்யப்
  பிரயோஜனரான தம்முடைய காதல் என்னலாமோ?’ என்ன, அதற்கு விடை
 
அருளிச்செய்கிறார், ‘இவர் காதலித்த பின்னர்’ என்று தொடங்கி. இங்கே
  ‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய, பேரும் தார்களுமே
  பிதற்ற’ (திருவாய். 6. 7 : 2.) என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.